செய்திகள் :

உத்தரகாண்ட்: ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம்; திறக்கப்பட்ட 16 நாள்களில் சேதம்; அதிர்ச்சியில் மக்கள்

post image

வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.

அங்குள்ள டெக்ராடூனில் உள்ள நந்தாகீ செளவுக்கியில் ஆற்றின் மீது இருந்த பாலம் கடந்த ஆண்டு பெய்த மழையில் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். அந்த இடத்தில் ரு.16 கோடியில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தப் பாலம் கடந்த 12ம் தேதிதான் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இம்மழையால் புதிதாகத் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம் சேதம் அடைந்துள்ளது. மேம்பாலத்தின் இணைப்பு சாலையில் மிகப்பெரிய பள்ளம் விழுந்து அது ஆற்றில் அடித்து செல்லப்பட்டுவிட்டது.

உடைந்த பாலம்
உடைந்த பாலம்

ஆனாலும் பாலத்திற்கு எந்தவித சேதமும் இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் பாலம் திறக்கப்பட்டு 16 நாள்களில் சேதம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை மூன்று நாள்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேம்பாலத்திற்கு அருகில் பள்ளம் விழுந்ததால் அருகில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்த பிறகுதான் பள்ளம் விழுந்த பகுதியில் மண் போட்டு நிரப்பிச் சரிசெய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேம்பாலத்தைக் கட்ட ஒரு ஆண்டு எடுத்துக்கொண்டது. ஆனால் போக்குவரத்திற்குத் திறக்கப்பட்டு 16 நாள்களில் சேதமாகியுள்ளாதாகவும், தரமில்லாத பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மாநில முதல்வரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்தில் மண்போட்டு நிரப்பிப் போக்குவரத்தைச் சரிசெய்ய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

கொல்கத்தா: ஹோட்டலில் அதிகாலையில் தீவிபத்து; சிகிச்சைக்கு வந்த 9 வங்கதேசத்தினர் பலியான சோகம்

கொல்கத்தாவில் உள்ள ப்ரீ ஸ்கூல் தெருவில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணிக்குத் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. மிகவும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ... மேலும் பார்க்க

தஞ்சை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த நபர்; காப்பாற்ற முயன்ற கேட் கீப்பரும் பலியான சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குமார்(30) என்பவர் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று நள்ளிரவு அந்தோதியா ரயில்... மேலும் பார்க்க

அறுவடை இயந்திரத்தில் சிக்கிய புடவை; பெண் தொழிலாளி உயிரிழப்பு - பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம். இவருக்கு, ஆலத்தூர் தாலுகா காரை மேற்கு கிராமத்தில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. இந்த விளைநிலத்தை அய்யலூர் பகுதியைச் ச... மேலும் பார்க்க

மும்பை நிலச்சரிவு: பாறை உருண்டு வீடுகளில் விழுந்ததால் 5 பேர் பலி; நள்ளிரவில் என்ன நடந்தது?

மும்பை காட்கோபரில் உள்ள சிராக் நகரில் கெளஷியா சால் பகுதியில் இன்று அதிகாலையில் மலைப்பகுதியிலிருந்து மிகப்பெரிய கல் ஒன்று உருண்டு வந்து கீழே இருந்த 3 வீட்டில் விழுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் உற... மேலும் பார்க்க

விமானத்திற்குள் கஞ்சா புகைத்த பைலட்; கீழ்நோக்கி பறந்த விமானத்திற்குள் மிதந்த பயணிகள்; நடந்தது என்ன?

கடந்த சில நாள்களுக்கு முன்பு புக்கெட் என்ற இடத்திலிருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென 300 அடி உயரம் குறைந்தது. இதனால் விமானம் ஆடியதில் அதில் பயணம் செய்த 137 பயணிகளில் ... மேலும் பார்க்க

அரசுப்பள்ளி மாணவர் மின்சாரம் தாக்கி பலி: `இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது' - HM சஸ்பெண்டு

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள குப்பிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் 6-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் யோகேஷ் துடிதுடிக்க பரித... மேலும் பார்க்க