செய்திகள் :

எத்தனை யுகங்கள் ஆனாலும் குறையாது இந்த 'மரியாதை'! பாரதிராஜாவுக்கு ஒரு வாசகியின் அஞ்சலி

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் ?

பதில் -இயக்குனர் இமயம்.

தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றி அமைத்த அவரின் ஒவ்வொரு படங்களும் காவி(ப்பி)யங்கள்

ஒவ்வொரு படங்களும் எளிமையான மனிதர்களின் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும்.

என்னை கவர்ந்த என் மனசுக்கு நெருக்கமான ஒரு திரைப்படம்ன்னா

அது 'முதல் மரியாதை'.தான்..

மண்ணும் மனசுக்குமான ஒரு அற்புத படைப்பு..

'ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோ ஒரு புல்லாங்குழல் வார்த்தைக்கு வராத சோகத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கும் .அப்படி ஒரு சோக ராகத்தை தான் ஸ்வரம் பிரித்தேன். அதையே உங்கள் பார்வைக்கு படம் பிடித்தேன். என்று ஆரம்பத்தில் அவர் பேசுவது மென் சோகத்தின் வெளிப்பாடாய்.. மயிலிறகால் நம்மை வருடும்..

மாமனுக்காக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டு மனைவியால் ஒதுக்கப்பட்டு வாழும் ஊர் பெரியவர் மலைச்சாமிக்கும் ,ஊருக்குப் புதிதாக வரும் பரிசல்காரி குயிலுக்கும் இடையே தோன்றும் தூய நட்பு ...அந்த நட்பு காதலாக மலரும் விதம்... மிக நேர்த்தியாக கவித்துவமாக ஒவ்வொரு காட்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்..

பாரதிராஜா - சிவாஜி கணேசன்
பாரதிராஜா - சிவாஜி கணேசன்

கிராமத்து மக்களின் கலாச்சாரம் மற்றும் மனிதர்களின் உணர்வுகளை எந்தவித சமரசமும் இன்றி திரையில் காண்பித்து இருப்பார் இமயம்.

ராதாவுக்காக சிவாஜி ஆடு விலை பேசி விற்கும் காட்சி ..இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி. நம்ம பாட்டுக்கு எதிர்ப் பாட்டு பாடுபவள்

'இவள்' தானா என்று நெக்குருகி போகும்காட்சி ....

ஒவ்வொன்றும் ஒவ்வொரு காதல் அத்தியாயங்கள்.

'நான் எனக்காக சாப்பிடல உனக்கு வவுறு வலிக்க கூடாது பாரு அதுக்காகத்தேன்'ன்னுபேசிக்கொண்டே மீனை சப்புக்கொட்டி சாப்பிடற அழகு ஒரு க்யூட் ஹைகூ.

 பிளஸ் டூ .. காலைல மைதானத்திற்கு பாஸ்கட் பால் விளையாட போகும்போது.. அருகில் உள்ள சின்ன தேநீர் கடையில் பூஸ்ட் சாப்பிடுவது உண்டு.... அப்பொழுது அந்தக் கடையில் இருக்கும் ஸ்பீக்கரில் இந்த படத்தின் பாடல்கள் ஒலிக்கும்.. குறிப்பாக 

'ஆனால் ஒரு சந்திரனைப் பார்த்து தாமரை மொட்டு அவசரப்பட்டு அவிழ்ந்து விடுகிறது ..சந்திரன் சபைக்கு வருகிறது .தாமரை செய்த குற்றத்திற்கு சந்திரனுக்கு தண்டனையா? ன்னு கம்பீரமான குரலில் வைரமுத்து பேச பின்னாலேயே ஒலிக்கும் 'ராசாவே உன்னை நம்பி' பாடல்...

பாரதிராஜா
பாரதிராஜா

கிரவுண்டுக்கு போறதை கூட மறந்துவிட்டு இந்தப் பாடலை ரசித்து கேட்டது கண் முன்னே நிழலாடுகிறது. 

படத்தில் ஒவ்வொரு பாடலிலும் மண்வாசனை பொங்கி வழியும்.

 ஆற்றில் மிதக்கும் தனது மனைவியின் பிணத்தைப் பார்த்தவுடன் புல்லாங்குழலை தூக்கி எறியும் அந்த காட்சியில்‌.. புல்லாங்குழலின் மெல்லிய வாசிப்பில் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை  உணரலாம்.

 'சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி'... மறக்குமா இந்த வசனம். 

குயிலின் வார்த்தைகளும், அவரது அண்மையும் தான் ஆறுதலாய் நினைக்கும் மலைச்சாமி.

 மரணப்படுக்கையில் கிடக்கும் போது குயில் வந்ததும் அவரது முகத்தை பார்க்கும் பார்வை ஒன்று போதும்... இதுவரை மனதில் இருந்த அன்பையும் காதலையும் குயிலுக்கு உணர்த்தும் அந்த பார்வை அந்த முகபாவம்... சிவாஜி மறைந்து மலைச் சாமியாகவே... திரையில் தெரிவார்.

ராதா கொலை செய்தது யார்ன்னு எட்டிப் பார்க்கும் வடிவுக்கரசி யின் நெற்றியில்  தண்ணீர் பட்டு பொட்டு கரையும். வடிவுக்கரசியின் காதலன் சத்யராஜ்   வடிவுக்கரசியின் மகளுக்கு அப்பாஅவர்தான் என்பதையும்

 இந்த ஒரே ஒரு ஷாட்டில் எந்த ஒரு வசனமும் இல்லாமல் நமக்கு உணர்த்தி விடுவார் இயக்குனர்.

இப்படி படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மிக மிக நேர்த்தியாக கவித்துவமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இந்தப் படம் பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு காதல் கதை... 

எத்தனை யுகங்கள் ஆனாலும் கூடிக் கொண்டே இருக்கும் முதல் மரியாதைக்கான 'மரியாதை'.

என்றென்றும் அன்புடன் 

ஆதிரை வேணுகோபால்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

சாதியச் சாட்டையும் சமூகச் சாட்சியும்! - பாரதிராஜா என்ற ஆகச்சிறந்த சமூக ஆவணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எமனை அழவைத்த இமயம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாரதிராஜா: `தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய மேதை... சினிமாவில் புரட்சிகள் செய்த இயக்குநர் இமயம்!'

தமிழ் சினிமா வரலாற்றை `பாரதிராஜாவுக்கு முன்', 'பாரதிராஜாவுக்குப் பின்' என்று தாராளமாகப் பிரிக்கலாம். 1970-களின் இறுதியில், திரையரங்குகளில் நிலவிய செயற்கையான நாடகத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மண் ... மேலும் பார்க்க

சட்டை கிழிந்த பிகில் FDFC முதல் GOAT வரை - ஒரு ரசிகனின் எமோஷனல் டைரி!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எவர்கிரீன் அண்ணனாக நெஞ்சை அள்ளிய 'திருப்பாச்சி' நினைவலை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'துப்பாக்கி' ஜகதீஷை பார்த்து நிஜ ராணுவ வீரனான ரசிகனின் கதை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க