செய்திகள் :

`எனது மகளுக்கு திருமணம்' - மார்க்கெட்டில் கொத்தமல்லியை விற்பனை செய்ய முடியாமல் கதறி அழுத விவசாயி

post image

விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்று கூறுவதுண்டு. மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது விளைபொருள் விற்பனை செய்யப்படாமல் போனதால் கதறி அழுத காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள நானாகேதி என்ற இடத்தில் இருக்கும் மார்க்கெட்டிற்கு புதிதாக அறுவடை செய்யப்பட்ட கொத்தமல்லி மற்றும் கடுகு மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு சுட்டெரிக்கும் வெயிலில் கிடந்தது.

மார்க்கெட்டில் காலையில் ஏலம் தொடங்கியது. ஏலத்தின் போது பணியில் இருந்த ஆய்வாளர் ராஜ்குமார் சர்மா அதிக குடிபோதையில் இருந்ததாகவும், சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

ஒரு விவசாயியின் கொத்தமல்லி குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.5,700 ஏலம் போனபோது ஆய்வாளர் சீட்டில் ரூ.5,400 என்று பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயிக்கும், ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ராஜ்குமார் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு அவர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் ஏலம் நிறுத்தப்பட்டது. அதிகமான விவசாயிகள் அதிகாலையில் தங்களது விளைபொருட்களை மார்க்கெட்டிற்கு எடுத்து வந்திருந்தனர். அவர்கள் ஏலம் நிறுத்தப்பட்டதால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

சிலர் வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்து தங்களது விளைபொருட்களை கொண்டு வந்திருந்தனர். அவர்களில் ஸ்ரீபுர்சக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியும் இருந்தார். அவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் ஏற்பாடு செய்ய தனது தோட்டத்தில் விளைந்த கொத்தமல்லியை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தார். ஏலம் நிறுத்தப்பட்டதால் அந்த விவசாயி மார்க்கெட்டிற்கு வெளியில் நின்று கொண்டு கைகூப்பி அதிகாரி மற்றும் வியாபாரிகளிடம் தங்களது பொருட்களை ஏலத்தில் விடும்படி கெஞ்சினார். அவர், "என் மகளுக்கு நாளை திருமணம். அந்த விழாவிற்கு எனக்கு பணம் தேவை. என் விளைபொருள் இன்று விற்கப்படாவிட்டால், திருமணம் பாழாகிவிடும்," என்று கூறி அவர் கதறி அழுதார்.

ஆனால் அவரது கண்ணீரைத் துடைக்க யாரும் முன்வரவில்லை. அவரது கோரிக்கை எடுபடவில்லை. மார்க்கெட் பலமணிநேரம் மூடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அங்குள்ள நெடுஞ்சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் வந்து விவசாயிகளிடம் பேசி போக்குவரத்தை சரி செய்தனர்.

இது குறித்து கிரிராஜ் என்ற விவசாயி கூறுகையில், " இப்பிரச்னையால் டிராக்டர்களுக்கு இரண்டு முறை பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நான் காலை ஏழு மணிக்கு இங்கு வந்தேன். ஏலம் ரூ. 5,700, ஆனால் ரூ. 300 குறைக்கப்பட்டது. எந்த நிர்வாகமும் இங்கு எதுவும் செய்யவில்லை. எல்லாம் தன்னிச்சையாக நடக்கிறது.

பல விவசாயிகளுக்கு திருமணங்கள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் இருந்தன, மேலும் அவர்கள் தங்கள் விளைபொருட்களை விற்று பணம் ஏற்பாடு செய்ய மார்க்கெட்டிற்கு வந்திருந்தனர்'' என்றும் அவர் கூறினார். இப்போராட்டம் காரணமாக அதிகாரி ராஜ்குமார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ராஜ்குமார் குடித்துவிட்டு பணிக்கு வந்தாரா என்பதை தெரிந்து கொள்ள அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று மார்க்கெட் செயலாளர் சிங் தெரிவித்தார். அதோடு ராஜ்குமார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விவசாயி கதறி அழுத காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பமேளா வைரல் பெண் மோனலிசா.! கேரளாவில் காதல் திருமணம்! பின்னணி என்ன?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற இளம் பெண் கும்பமேளாவில் பாசிமணி விற்பனை செய்தபோது தனது வசீகர புன்னகையாலும், காந்த கண்களாலும் வைரலானார். பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள... மேலும் பார்க்க

திடீரென தாக்கிய சிறுத்தை; எதிர்த்துப் போராடி, கொன்று உயிர்தப்பிய 18 வயது மாணவன் - அதிர்ச்சி சம்பவம்!

வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால் அடிக்கடி வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலன் மாவட்டத்தில் ஒரு வயதான சிறுத்தை 18 வயது மாணவனை தா... மேலும் பார்க்க

ஆழ்கடல் மர்மம்: 3000 அடி ஆழத்திலிருந்து கரைக்கு வந்த 'ராட்சத நாகங்கள்' | Doomsday Fishes வீடியோ!

மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் (Cabo San Lucas) கடற்கரைக்குச் சுற்றுலா சென்றவர்களுக்கு அண்மையில் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆழ்கடலில் மட்டுமே வாழக்கூடிய, 'ஓர்ஃபிஷ்' (Oarfish) எனப்படும் இரண்டு ராட்ச... மேலும் பார்க்க

அஸ்ஸாமிலும் இன்ப அதிர்ச்சி: தேர்தலையொட்டி 40 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.9,000 வரவு வைப்பு!

பெண் வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு அல்லது தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது இப்போது வழக்கமாகி இருக்கிறது. மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு உட்பட ப... மேலும் பார்க்க

"இறுதிச்சடங்கு செய்ய இருந்தேன்" - குண்டும் குழியுமான சாலையால் மூளைச்சாவு அடைந்த பெண் பிழைத்த வினோதம்

உத்தரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் அதிர்ஷ்டவசமாக குண்டும் குழியுமான சாலைகளால் உயிர் பிழைத்துள்ளார். அங்குள்ள ரேபரேலி கோர்ட்டில் பணியாற்றி வருபவர் வினீதா (50). இவர் கடந்த மாதம் தனது வீட்டில் வே... மேலும் பார்க்க

போனை பிளாக் செய்த காதலன்: விரக்தியில் மும்பை ரயிலிலிருந்து கடலில் குதித்த பெண்.. காப்பாற்றிய மீனவர்!

இன்று காலை, மும்பை புறநகர் ரயிலில் இருந்து ஒரு பெண் மும்பை கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து வாஷி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயில் வா... மேலும் பார்க்க