தரவு, திரை, மனநிலை - நவீன தேர்தல் யுக்தியின் மூன்று முகங்கள் செயல்படுவது எப்படி?
"என் உடல் நடுங்கியது; உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டேன்" - தன் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்த மௌனி ராய்
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மௌனி ராய். குறிப்பாக ‘நாகினி' தொடரில் நாகினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிக்கும்போது அனுபவித்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
“எனக்கு அப்போது 21 வயது. ஒரு படத்துக்கான கதையைக் கேட்பதற்கு ஒருவர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்குச் சிலர் அமர்ந்திருந்தனர்.

அப்போது அந்த இயக்குநர் காட்சியை விளக்கினார். கதையின்படி, கதாநாயகி நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கி விடுவார். நாயகன் அவரைக் காப்பாற்றுவார் என்று கூறிய அவர் காட்சியை விளக்குவதாகக் கூறி, திடீரென என் முகத்தைப் பிடித்துக் கொண்டு, முகத்துக்கு அருகில் நேராக வந்தார்.
அவர் செயலைக் கண்டு உறைந்து போனேன். என் உடல் நடுங்கத் தொடங்கியது. உடனடியாக அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன்.
இச்சம்பவம் நீண்டகாலமாக எனக்குப் பயத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.



















