"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
``என் கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறுவார்கள், ஆனால்'' - பாலிவுட் நடிகர் கோவிந்தா மனைவி
பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். கோவிந்தா மும்பையில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்காமல், அருகில் வேறு ஒரு வீட்டில் வசிக்கிறார். இதை காரணமாகக் காட்டி, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இருவரும் ஒருமுறை விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதன் பிறகு அவர்கள் கவுன்சிலிங் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். விநாயகர் சதுர்த்தியன்று இருவரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
கோவிந்தா மராத்தி நடிகை ஒருவருடன் திருமணத்துக்கு வெளியான உறவு வைத்திருப்பதுதான் இவை அனைத்திற்கும் காரணம் என்று இணையத்தில் பரவியது.

`பெண்கள் சொந்த சம்பாத்தியம் வேண்டும்'
இதுகுறித்து கோவிந்தாவின் மனைவி சுனிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “அனைத்துப் பெண்களுக்கும் வருமான ஆதாரம் இருக்க வேண்டும்; அவர்கள் கணவனைச் சார்ந்திருக்கக் கூடாது.
நான் யூடியூப் தொடங்கிய நான்கு மாதத்திலேயே வருமானம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் சொந்தமாக எழுந்து நிற்க வேண்டும். உங்கள் பணத்தை நீங்களே சம்பாதிப்பது ஒரு வேறு விதமான மகிழ்ச்சியைத் தருகிறது.
உங்கள் கணவர் பணம் கொடுக்கிறார், ஆனால் அவர் 10 முறை கேட்ட பிறகு ஒரு முறை கொடுப்பார். ஆனால் உங்கள் சொந்த சம்பாத்தியம் உங்களுடையது.
எனது கணவர் கோவிந்தாவிடம் ஒரு பெரிய வீட்டைக் கோர விரும்புகிறேன். மகள் டினா மற்றும் மகன் யாஷுடன் நாங்கள் 4 படுக்கையறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகிறோம். இந்த வீடு எங்களுக்கு சிறியது. எனவே ஒரு பெரிய 5 படுக்கையறைகள் கொண்ட வீடு வாங்கி கொடுக்கும்படி எனது கணவரிடம் கேட்பேன்,” என்று தெரிவித்தார்.

வதந்திகளை நம்புவதில்லை
கோவிந்தாவிற்கு மராத்தி நடிகையுடன் தொடர்பு இருப்பது குறித்து அந்த நிகழ்ச்சியில் கேட்டபோது,
“எனது கணவருக்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக நான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் இதுவரை என் கண்ணால் நேரில் பார்த்ததில்லை. அவர்களை கையும் களவுமாக பிடித்ததுமில்லை. அதனால் அதுகுறித்து நான் இதுவரை வாய் திறக்கவில்லை. நான் வதந்திகளை நம்புவதில்லை. அவருக்கு இத்தகைய செயலில் ஈடுபடக்கூடிய வயது இல்லை. அவர் தனது மகள் மற்றும் மகனின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்,” என்றார்.
கோவிந்தாவும் சுனிதாவும் காதலித்து 1987-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.




















