செய்திகள் :

ஏற்காடு: வேனை பின்னோக்கி இயக்கிய ஓட்டுநர் - டயரில் சிக்கி துடிதுடித்து உயிரிழந்த 3ம் வகுப்பு மாணவி

post image

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகில் உள்ள வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரின் 8 வயது மகள் மேனகா முண்டகாம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். ஏற்காட்டில் போதிய அளவில் அரசு பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தால் தனியார் வாகனங்கள் மூலம் குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

மேனாகாவும் தனியார் வேன் மூலம் பள்ளிக் சென்று வந்திருக்கிறார். நேற்று காலை பள்ளிக்கு வேனில் சென்ற மேனகாவை ஓட்டுநர் ரங்கநாதன் இறக்கி விட்டிருக்கிறார்.

உயிரிழந்த மாணவி மேனகா

வேனின் பின்புறம் மேனாகா நின்றுக் கொண்டிருப்பதை அறியாத ஓட்டுநர் ரங்கநாதன், வேனை பின்னோக்கி இயக்கியிருக்கிறார். வேன் டயரில் சிக்கிய மாணவி மேனகா, படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்துள்ளனர். பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் தனியார் வாகனங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஏற்காடு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருச்சி: மோதிக்கொண்ட இருச்சக்கர வாகனங்கள்; பலியான காவல்துறை உதவி ஆய்வாளர்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது: 55). இவர், 1995-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர்... மேலும் பார்க்க

Keralam: மூழ்கிய கப்பலில் கால்சியம் கார்பைடு; கடலோர மக்களுக்கு அச்சுறுத்தல்; நீதிமன்றம் கவலை

கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்கு கப்பல், மறுநாளான மே 24-ம் தேதி கொச்சியிலிருந்து 38 நா... மேலும் பார்க்க

Brazil: கவனக்குறைவால் Bungee Jumping விபத்தில் சிக்கிய மாணவி; காப்பாற்ற செவிலியர் நடத்திய போராட்டம்

ஒரு நொடி சாகசம், அடுத்த நொடி மரணம் எனப் பிரேசிலின் பாலத்தில் அரங்கேறிய விபரீதம் ஒட்டுமொத்த உலகையும் உறைய வைத்திருக்கிறது. சா பாலோ மாகாணத்தில் உள்ள லிமேரா நகருக்கு அருகில், "எலும்புக்கூடு பாலம்" என்ற ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சாலையோரக் கிணற்றில் விழுந்த வேன்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி; பிரதமர் இரங்கல்

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டர்பூரைச் சேர்ந்த 15 பேர் கோயில் ஒன்றுக்குச் சென்றுவிட்டு வேன் ஒன்றில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வேன் தந்துல்வாடி என்ற கிராமத்தில் வந்த... மேலும் பார்க்க

அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என்ன?

அஸ்ஸாமில் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத்தளத்தில் இன்று விமானப்படை விமானம் AN-32தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. விபத்தில் விமானத்தில் இருந்த விமானப்படை வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த... மேலும் பார்க்க

மன்னார்குடி: `அப்பா வந்திருக்கேன் எழுந்திரி ராசா'- கார் மோதி 3 பள்ளி குழந்தைகள் பலி; கதறும் பெற்றோர்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை அரசுப் பள்ளியில் லோகேஷ், ரச்சித் ஆகிய இருவர் சிறுவர்கள் ஆறாம் வகுப்பும், ராஜமுரளி என்ற சிறுவன் ஏழாம் வகுப்பும் படித்து வந்தனர். இன்று மாலை வழக்க... மேலும் பார்க்க