தேனி: "எங்களின் தாகம் தீர்த்தவர் ஜான் பென்னிகுயிக்" - பொங்கல் வைத்து கொண்டாடும்...
"ஐகானிக்கான ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!" - ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான்
இயக்குநர் நிதேஷ் திவாரி பிரமாண்டமாக பாலிவுட்டில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸிம்மரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள்.

சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவருடன் இணைந்து பணியாற்றும் அனுபவத்தை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்திருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், “இது எங்களிருவருக்குமே டெரிஃபிக் அனுபவமாக இருக்கிறது. உலகிற்கு மிக முக்கியமான, ஐகானிக்கான ஒன்றை நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ப்ரோமோவில் அவர் ஒரு சவுண்ட்ஸ்கேப் கொடுத்திருந்தார். அதை நான் எடுத்து, இறுதியில் சமஸ்கிருத வார்த்தைகளை சேர்த்து முழுமையாக்கினேன்.
சிக்கலான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரிந்த, மிகப் பிரமாண்டமான ஒன்றை நாங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். அதே சமயம் அதற்கு புதியதொரு வடிவத்தைக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவிலிருந்து உலகிற்கு ஒரு புதிய விஷயத்தைக் கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கு சில விஷயங்களை மறக்க வேண்டும்.
‘ராமாயணம் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று நமது உள்ளுணர்வு சொல்லும் வழக்கங்களை விட்டு புதிய ஒன்றை கொடுக்க வேண்டும்.
தற்போது டாக்டர் குமார் விஷ்வாஸுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ராமாயணத்திலும், இந்தி மொழியிலும் அவர் ஒரு பேராசிரியர் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர்.
அவருடைய உடலின் ஒவ்வொரு அணுவிலும் ராமாயணம் பேசுகிறது. அவர் அப்படியான வரிகளை எழுதித் தருகிறார். மிகவும் இதயமுள்ள, அன்பான மனிதர். எனவே நாங்கள் மகிழ்ச்சியுடனும், புதுமையுடனும் இதைச் செய்து வருகிறோம்” எனக் கூறியிருக்கிறார்.


















