10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை; மகள்களின் பெயர்களை தந்தை மறந்து ...
தீபிகா படுகோனேயின் 40வது பிறந்தநாள்: 'ரசம் சாதம், முட்டை, வறுத்த மீன்' - இளமையின் ரகசியம் என்ன?
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். அவர் இந்தப் பிறந்தநாளை தனது மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.
அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. அவரது கணவர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படம் வசூலில் ரூ. 1000 கோடியைத் தாண்டி இருக்கிறது. 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தீபிகா படுகோனேவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தீபிகா படுகோனே இன்றைக்கும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதன் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார்.
காலையும், மாலையும் கட்டாயம் உடற்பயிற்சி, தியானம், யோகாவில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் அதனைப் பகிர்ந்துள்ளார். கால்களை சுவருக்கு எதிராக மேல்நோக்கி படுக்க வைப்பது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது முதல் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது என்று தீபிகா குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோகா ஆசனத்தை காலையில், கர்ப்பமாக இருக்கும்போது கூட செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதே போன்று மற்றொரு ஆசனத்தையும் பகிர்ந்துள்ளார்.
தரையில் கைகளை முன்னோக்கி வைத்து கால்களை நீட்டி இடுப்பை மேல் நோக்கி தூக்கியபடி அந்த ஆசனம் இருக்கிறது. பிட்னஸ் சென்டரில் யாஸ்மின் கராச்சிவாலா நடிகை தீபிகா படுகோனேவிற்குத் தேவையான பயிற்சிகளை காலையிலேயே வழங்குகிறார். நடிகை அனன்யா பாண்டேயுடன் சேர்ந்து கொண்டு இந்த உடற்பயிற்சிகளை ஜிம்மில் செய்கிறார்.
இரவில் ரசம் சாதம்
சாப்பாடு விஷயத்தில் தீபிகா படுகோனே எப்போதும் தென்னிந்திய உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தினமும் 6 நேரம் உணவு எடுத்துக்கொள்வதாகக் கூறும் தீபிகா படுகோனே, காலையில் இட்லி, தோசை அல்லது உப்மா சாப்பிடுகிறார். புரோட்டீனுக்காக முட்டை எடுத்துக்கொள்கிறார். மதிய உணவில் பருவகால காய்கறிகளுடன் பருப்பு மற்றும் ரொட்டி சேர்த்துக் கொள்கிறார். வறுக்கப்பட்ட மீன் அவரது உணவில் பிரதானமாக இடம் பிடிக்கிறது.
ஒரு கிண்ணம் சூப் மற்றும் ரசம் சாதத்துடன் அவரது இரவு உணவு மிகவும் எளிமையாக இருக்கிறது. தீபிகா தனது உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து வருகிறார். கடுமையான பணிகளிடையே 5 நிமிடம் கிடைத்தாலும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்துவிடுவேன் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.




















