செய்திகள் :

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

post image

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர். ஐ.நாவில் பேசப்போகும் வாய்ப்பு, யாருக்கான குரலாக அது ஒலிக்கும் உள்ளிட்ட விஷயங்கள் பற்றிப் பேசுகிறார்.

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்

"சின்ன வயசுல இருந்தே சமூகத்துக்காக ஏதாவது பண்ணணும்ன்ற எண்ணம் இருந்துச்சு. ஸ்கூல் முடிச்சதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில Religion, Philosophy, Sociology இந்த மூணு பாடங்களையும் ட்ரிபிள் மேஜரா படிச்சேன். சமூகத்தை இன்னும் ஆழமா புரிஞ்சுக்கணும்ன்றதுக்காகவே அந்தப் படிப்பை தேர்வு பண்ணேன். இப்போ மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் படிச்சிட்டு இருக்கேன்.

படிப்பு ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும், 'KYRO' (Know Your Rights India) அப்படின்ற அமைப்பை 2020-ல தொடங்கி, வழக்கறிஞர்கள் குழுவுடன் இணைந்து, எளிய மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்க உதவினோம். சில நீதிபதிகளுடன் இணைந்து சட்ட விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தினோம். அதேபோல பொதுமக்கள், அவர்களுக்கான உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ள விழிப்பு உணர்வு நிகழச்சிகள் நடத்தினோம். இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர், AI மாதிரியான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் நோக்கிலும் பயிற்சி அளித்து வருகிறோம்.

அபிஷேக் அசீர்

இதுபோன்ற, சமூகப் பணிகள் மூலமா, ஜெர்மனியில CDU (கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன்) ஆதரவோட நடந்த தலைமைத்துவப் பயிற்சி திட்டத்துக்குத் தேர்வாகினேன். அதுக்கப்புறம் சமூகப் பணிக்கான ஃபெலோஷிப் திட்டத்துலயும் கலந்து கொண்டேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துல நடந்த "Service to Leadership" நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரா பணியாற்றினேன். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம், பிற நாடுகளில் உள்ள இந்திய தூதரக நிகழ்வுகள் எனப் பல சர்வதேச மேடைகள்ல இந்திய இளைஞர்களோட பங்களிப்பை பற்றி பேசுற வாய்ப்பு கிடைச்சது.

அடுத்ததா, ஜூலை 13-ம் தேதி நடக்குற ஐ.நா சபையின் அமர்வில் உரையாற்றும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் கீழ் செயல்படும் ஆலோசனை அமைப்பான பூர்வீக மக்களின் உரிமைகள் நிபுணர் அமைப்பின் (EMRIP) அமர்வில் கலந்துகொள்றேன். அது, தமிழகத்தில் வசிக்கும் காணிப் (காணிக்கார்) பழங்குடியின மக்களின் மொழி, கலாசாரம், பாரம்பர்யம், பழக்க வழக்கங்கள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிட்டு வருது.

அபிஷேக் அசீர்

ஒரு சமூகத்தோட அடையாளம் அதோட பண்பாட்டுலதான் இருக்கு. அதனால அவங்களோட குரல் உலக அளவுல கேட்கணும் அப்படின்றதுக்காகத்தான் இந்த விஷயத்தை ஐ.நா மேடையில பேசப் போறேன். இந்த உலகம் அதிகம் கவனிக்காத மக்களின் குரலை உலக மேடையில கொண்டு சேர்க்க கிடைச்ச ஒரு வாய்ப்பா இதைப் பார்க்குறேன்" என்கிறார்.

வாழ்த்துகள் அபிஷேக் அசீர்!

- வெ.பால சண்முகம் 

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க

`இணையுடன் சண்டை; மனிதனைப் போலவே கோபித்துக் கொள்ளும் ஆண் கொரில்லா' - இணையத்தை கவர்ந்த வீடியோ

விளையாட்டாகவோ அல்லது கோபமாகவோ சண்டை போட்டுக் கொண்ட பிறகு மனிதர்கள் எப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்களோ, அதேபோல் ஒரு கொரில்லா செய்திருக்கும் சுவாரசியமான செயல் இப்போது இணையவாசிகளைப் ப... மேலும் பார்க்க

குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன்கள்; அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களே கிடையாது. அதோடு இரவு 12 மணிக்குப் பிறகும் உறங்காமல் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை நோண்டிக்கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு போனில் கேம் விளையாட எதிர... மேலும் பார்க்க

`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும... மேலும் பார்க்க

மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!

லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட... மேலும் பார்க்க