'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கர...
ஒரு சேஃப்டி பின் விலை ரூ.69,000 - பிராடாவின் புதிய தயாரிப்பால் வெடித்த விவாதம்!
பிரபல ஃபேஷன் பிராண்டான பிராடா (Prada) சமீபத்தில் ஒரு சேஃப்டி பின்னை ஃபின்னை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை சுமார் ரூ.69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.69,000 சேஃப்டி பின்
சாதாரணமாக நாம் அனைவரும் பயன்படுத்தும் சேஃப்டி பின், இத்தாலிய சொகுசு பிராண்டான பிராடாவின் கைவண்ணத்தில் ஒரு விலையுயர்ந்த அணிகலனாக மாறியுள்ளது.
இந்த சேஃப்டி பின், ஒரு சாதாரண உலோக ஊசியாக இல்லாமல் நூல்களால் பின்னப்பட்ட அணிகலனாக மாறியுள்ளது.
இந்த மெட்டல் சேஃப்டி பின் ப்ரூச் (Metal Safety Pin Brooch) ஆரஞ்சு, வெளிர் நீலம் மற்றும் இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கிறது.

இதன் சர்வதேச விலை 775 டாலர்கள் ஆகும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.69,000 ஆகும். இதில் வைரங்களோ அல்லது வேறு எந்த விலைமதிப்புள்ள கற்களோ பதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சேஃப்டி பின்னின் விலை இணையத்தில் வெளியானதில் இருந்து, நெட்டிசன்கள் பிராடா நிறுவனத்தை கிண்டல் செய்து வருகின்றனர். வெறும் ரூ.2-க்கு பெட்டிக் கடையில் கிடைக்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு விலையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிராடாவின் விலையுயர்ந்த தயாரிப்பு
பிராடா நிறுவனம் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வது இது முதல் முறையல்ல. முன்னதாக, இந்திய வடிவமைப்பான கோலா செருப்புகளை சுமார் 1,000 முதல் 1,200 டாலர் வரை விற்பனை செய்து சர்ச்சையில் சிக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.


















