செய்திகள் :

கட்டா குஸ்தி 2: 'இந்த மாதிரி படம்லாம் இப்போ வர்றதே இல்ல'; பாராட்டிய ரஜினி - நெகிழ்ந்த விஷ்ணு விஷால்

post image

கடந்த 2022-ஆம் ஆண்டு, விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில் மக்களிடம் வரவேற்பைப் பெற்ற 'கட்டா குஸ்தி-2' படத்தைப் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் விஷ்ணு விஷாலை போனில் தொடர்புகொண்டு பாராட்டி இருக்கிறார்.

'கட்டா குஸ்தி-2'
'கட்டா குஸ்தி-2'

இதனை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருகிறார். அவரது பதிவில், " செம்ம படம். ரொம்ப ஜாலியான எண்டர்டெய்னர்.. இந்த மாதிரி படம் இப்போ எல்லாம் வர்றதே இல்ல..

ரொம்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஐஸ்வர்யா லெக்ஷ்மியும், நல்ல பெர்ஃபார்மன்ஸ். குட்டி சாரா பாப்பா, எப்படி புடிச்சீங்க. ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க.

விஷ்ணு, உங்களுக்கு நல்ல ஸ்கிரிப்ட் சென்ஸ் இருக்கு.. இன்னும் நல்ல படங்கள் நிறைய குடுங்க" என்று ரஜினிகாந்த் வாழ்த்தியிருப்பதாக விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார். மேலும் "நம்ம ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் கட்டா சூஸ்தி - 2 படத்தை பார்த்துட்டு போன் பண்ணி பேசினத நெனச்சு ரொம்பவே மட்டற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன்!

இந்த ஒட்டுமொத்த பயணத்தோட மிகச்சிறந்த தருணம் அவரோட இந்த போன் கால் தான்.. அவரோட இந்த வார்த்தைகள், என்னோட அடுத்தடுத்த பயணங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமருந்து.. மிக்க நன்றி சார்!" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Parithabangal: "நான், சுதாகர், டிராவிட் நடிச்ச படங்கள் அடுத்தடுத்த வாரங்கள்ல வருவது..." - கோபி

'ஜமா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன் இயக்கி, நடித்திருக்கும் 'அன்பே டயானா' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா ஆகியோர் இப்படத்தின் முதன்மை கதாபா... மேலும் பார்க்க

எழுத்தாளர் சங்க தேர்தல் `அப்ப பாக்யராஜ் சார் அப்படி சொன்னது எங்களுக்கு மனக்காயமாகிடுச்சு'- ரவிமரியா

தமிழ்த் திரையுலக ரைட்டர்களின் தனித்துவமான சங்கம் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை சொல்லலாம். உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும்போதெல்லாம் அவர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத... மேலும் பார்க்க

Brigida Saga: 'தங்கமே தங்கமே சந்தனம் வைக்குற தங்கமே!' - நடிகை பிரிகிடா நிச்சயதார்த்த கிளிக்ஸ்|Photos

``ரஜினி சாரும், ரஹ்மான் சாரும் சொன்ன அந்த வார்த்தைகள்..." - பிரிகிடா சகா மேலும் பார்க்க

Vishal: "இறுதிக்கட்ட பணிகளில் நடிகர் சங்கம் கட்டடம்..." - நடிகர் விஷாலின் அப்டேட் என்ன?

நடிகர் விஷால் தற்போது இயக்குநராக 'மகுடம்' படத்தின் வேலைகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால்இந்நிலையில், நேற்றைய தினம் நடிகர் ... மேலும் பார்க்க

Brigida Saga: 'காதல் கதைகள் திட்டமிடல்களுடன் தொடங்குவதில்லை' - நடிகை பிரிகிடாவுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகை பிரிகிடா சகாவுக்கும், நடிகர் - இயக்குநர் அனந்துக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அவருடைய நீண்ட நாள் காதலரான அனந்த்தை அறிம... மேலும் பார்க்க

`ஊரெல்லாம் இப்படி நிறைய சாமி இருக்கு!' அன்பே சிவம்: நிகழும் உரையாடல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 06

அன்பே சிவம்`சினி'ஸ்கோப் 06சமூக அக்கறையும், அரசியல் புரிதலும் இல்லாதவர்கள் என்று இப்போதைய ஜென்-சி தலைமுறையை பற்றி நம்மில் சிலருக்கு ஒரு குறை இருக்கிறது அல்லவா, அது போன்ற ஒரு புதிய தலைமுறை இளைஞனாக, இந்த... மேலும் பார்க்க