செய்திகள் :

கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்: '3 இந்தியர்கள் உயிரிழப்பு' - இந்திய அரசு என்ன சொல்கிறது?

post image

ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம்.

அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களைக் காணவில்லை என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

'அவர்கள் மூவரும் இறந்துவிட்டதாக' தற்போது இந்தியக் கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சர்பானந்த சோனோவால் எக்ஸ் பதிவு
சர்பானந்த சோனோவால் எக்ஸ் பதிவு

அந்த எக்ஸ் தளப் பதிவு:

"பாலாவ் நாட்டுக்கொடியுடன் பயணித்த 'எம்.டி செட்டபெல்லோ' கப்பலில் நிகழ்ந்த கொடூரமான விபத்து குறித்து அறிந்து நான் ஆழந்த வருத்தமடைகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, ஆரம்பத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மூன்று இந்திய மாலுமிகளில், தற்போது இரண்டு உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நமது கடல்சார் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். இந்த இக்கட்டான தருணத்தில் மோடி அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது.

அவர்களின் உற்றார் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

மீட்கப்பட்ட பணியாளர்களை உடனடியாகத் தாயகம் அழைத்து வரவும், உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் இறுதிச் சடங்குகளுக்காக விரைவாகக் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண்புமிகு! | கழுகார்

பதக்கத்தால் வெடிக்கும் பஞ்சாயத்து!'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா..'தமிழக காவல்துறை பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்து, எந்தவித தண்டனையும் பெறாமல் தூய பணிக் காலத்தை கொண்ட காவல் அதிகாரிகளுக்கு, முதல்வர்... மேலும் பார்க்க

"சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?" - தூத்துக்குடி சம்பவத்திற்கு பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். "தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண்... மேலும் பார்க்க

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க

`எங்கள் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில்.!' - இந்திய ஊழியர்களை ஒரே மெயிலில் பணிநீக்கம் செய்த ஓபன்டோர்

உலகத்தையே தொழில்நுட்பம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தொழில்நுட்ப உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு வாக்கியம், இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள... மேலும் பார்க்க

`15 வருட ராஜ்ஜியம்... 35 நாளில் சரிந்தது' திரிணாமூலை காங்கிரஸோடு இணைக்க மம்தா பேச்சுவார்த்தை?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்க... மேலும் பார்க்க