செய்திகள் :

கருப்பு: ``அதே அன்பு, அரவணைப்பு, கனிவு" - முதல்வர் விஜய்யைச் சந்தித்த ஆர்.ஜே பாலாஜி!

post image

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தமிழ்த் திரையுலகிலும் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் வேளையில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.

சூர்யா, த்ரிஷா நடித்து வெளியான திரைப்படம்,‘கருப்பு’. ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ.300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே பாலாஜி முதல்வர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார். இந்தச் சந்திப்பு குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ``கருப்பு திரைப்படத்திற்காக எல்லாவற்றையும் தொடங்கி வைத்த மனிதருடன்...! மாண்புமிகு தமிழக முதலமைச்சராக அவரை இப்போது சந்திப்பது முற்றிலும் ஒரு கனவு போன்ற உணர்வைத் தருகிறது!!! அதே அன்பு, அரவணைப்பு, கனிவு மற்றும் அமைதி...!!! எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி என் அன்பிற்குரிய விஜய் சார்" என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா

தமிழ் - மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அனந்தன் காடு' திரைப்படம். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்... மேலும் பார்க்க

Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

Love Oh Love: "செல்வா சார் வீட்டுல பாசமாதானே இருப்பாரு எதுக்கு பயப்படுறாஙகனு நினைச்சேன்!" - பவிஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

"முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது..." - நடிகை சமந்தா உருக்கம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ராஜ் ந... மேலும் பார்க்க

`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதா... மேலும் பார்க்க

சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா! கவனம் பெறுகிறதா?

பிரபலமான கர்னாடிக் சங்கீத வித்வானாக இருக்கும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) தனது மனைவி, மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தந்தையின் புகழ் தன்னுடைய தனித்துவத்தை மறைப்பதாக எண்ணும் சாருகேசியின் மகன் ... மேலும் பார்க்க