செய்திகள் :

கல்வி, டிஜிட்டல் ஆரோக்கியம், பெண்கள் முன்னேற்றம்! - வி.ஐ.டி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன்

post image

இந்தியக் கல்வி வரைபடத்தில் வேலூர் நகரத்தை உலகளாவிய அடையாளமாக மாற்றிய பெருமை வி.ஐ.டி (VIT) பல்கலைக்கழகத்தைச் சேரும். 'அயராத உழைப்பின் அடையாளம்' என்று போற்றப்படும் அதன் வேந்தர் முனைவர் ஜி. விசுவநாதன் அவர்கள் கட்டியெழுப்பிய இந்தக் கல்விப் பேரரசின் அடுத்தகட்ட நகர்வுகளில், ஓர் அமைதியான ஆளுமையாகத் தனது முத்திரையைப் பதித்து வருபவர் காதம்பரி ச.விசுவநாதன்.

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் அசிஸ்டென்ட் வைஸ் பிரசிடென்ட்டாகப் பொறுப்பு வகிக்கும் இவர், ஒரு கல்வி நிறுவனத்தின் வாரிசு எனும் அடையாளத்தைத் தாண்டி, அமெரிக்காவில் பொதுச் சுகாதாரத் துறையில் (Public Health) முதுகலைப் பட்டம் பெற்றவர். சமூகப் பாதுகாப்பு, மாணவர் மனநலம் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மையில் இவருக்கு தனித்துவமான பார்வை உண்டு. வி.ஐ.டி போபால் மற்றும் சென்னை வளாகங்களின் அசுர வளர்ச்சியில் காதம்பரியின் நிர்வாகத் திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கல்வி, டிஜிட்டல் யுகத்தின் சவால்கள் மற்றும் பெண்கள் தலைமைத்துவம் குறித்து ஆழ்ந்த சமூகப் பார்வையுடன் அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை...

வி.ஐ.டி-யில் படிச்சு, அப்புறம் அமெரிக்காவில் மாஸ்டர்ஸ் முடிச்சிருக்கீங்க. உங்க தாத்தாவின் (வி.ஐ.டி வேந்தர் ஜி. விசுவநாதன்) வரலாற்றை நீங்க ஆவணப்படுத்தியப்போ அது லிம்கா ரெக்கார்டு வரைக்கும் போச்சு. அந்தப் பயணத்துல உங்களுக்குக் கிடைச்ச 'டேக்அவே' என்ன?

''நிஜத்தைச் சொல்லணும்னா, அந்தப் புத்தகத்தை எழுதினப்போ நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தேன். அப்போ அது எனக்கு ஒரு ஹோம்வொர்க் மாதிரிதான் இருந்தது. அவருடைய பழைய டைரிகளைப் படிச்சு, அவங்க அப்பா அம்மாவிடம் கதைகளைக் கேட்டு ஒரு ஜர்னலிங் மாதிரிதான் அதை ஆரம்பிச்சேன். ஆனா, நான் வளர்ந்து சுயமா வாழ ஆரம்பிச்சப்போதான் அவர் கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட அந்த 'விடாமுயற்சி' (Perseverance) எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சது. இன்னைக்கும் அவர்தான் எங்க வீட்டிலேயே அதிகமா டிராவல் பண்றவர். சென்னை - வேலூர்னு வாரம் ரெண்டு முறை போவாரு. கல்விக்காகவும் தமிழுக்காகவும் எந்தப் பலனையும் எதிர்பார்க்காம அவர் கொடுக்கிற உழைப்பு உண்மையிலேயே ஆச்சரியமானது.''

கல்விக்கு உங்க குடும்பத்தின் பங்கு மிக பெரிசு! அதேபோல நீங்க உள்ள வரும்போது ஏன் ஒரு 'டிரெய்னி'யாவே (Trainee) ஸ்டார்ட் பண்ணீங்க?

''அது ஒரு ஸ்ட்ரக்சரான பிளான் கிடையாது. வீட்ல பாலிசி லெவல்ல பேசுறது வேற, ஆனா ஒரு நிறுவனத்தின் தினசரி நிர்வாகத்தைக் கத்துக்கணும்னா தினமும் 9 டு 5 ஆபீஸ்ல உட்கார்ந்து வேலை பார்க்கணும். பில் எப்படி செக் பண்றதுங்கிற சின்ன விஷயத்துல இருந்து, ஒரு எம்ப்ளாயிக்கு என்ன தேவைங்கிறது வரைக்கும் நான் வேலூர்ல டிரெய்னியா இருந்தப்போ தான் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் சென்னை கேம்பஸ் பொறுப்பை எடுத்தேன். 2017-ல போபால் கேம்பஸ் ஆரம்பிச்சப்போ, அது முழுக்க என்னோட பொறுப்புல இருந்தது. அங்க நிலம் வாங்குறதுல இருந்து, பேராசிரியர்களை பணியமர்த்தியது வரைக்கும் எல்லாமே நானே செஞ்சது எனக்கு ஒரு பெரிய லேர்னிங்.''

நீங்க வேலூர்ல பயோடெக்னாலஜி முடிச்சிட்டு, அமெரிக்காவில் பப்ளிக் ஹெல்த் (Public Health) படிப்பைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

''எனக்குச் சின்ன வயசுல இருந்தே நம்ம ஒரு விஷயம் பண்ணா அது மக்களுக்கு எப்படிப் போய் சேரும்னு பார்க்குறதுல ஆர்வம் அதிகம். தாத்தா மாதிரியே ஒரு சர்வீஸ் மைண்ட் செட்ல பப்ளிக் ஹெல்த் படிச்சேன். தாத்தா 'உணவுத்துறை அமைச்சரா' இருந்தாருங்கிற ஒரே காரணத்துக்காக, அங்க இருக்கும்போது 'ஃபுட் செக்யூரிட்டி' பத்தி ஒரு கோர்ஸ் படிச்சேன்.''

இந்த டிஜிட்டல் காலத்துல டெக்னாலஜி ஒரு பக்கம் பிளஸ்ஸா இருந்தாலும், இன்னொரு பக்கம் குழந்தைகளோட மெண்டல் ஹெல்த்தை பாதிக்குதே.. இதை எப்படிப் பார்க்குறீங்க?

''டெக்னாலஜி இல்லாம இன்னைக்கு எதுவும் சாத்தியமில்லை. நான் போபால் கேம்பஸையே சென்னையில இருந்துகிட்டு டிஜிட்டலாவும் மேனேஜ் பண்றேன். ஆனா அதே சமயம், சோஷியல் மீடியாவால குழந்தைகளுக்கு டிப்ரஷன், ஆங்சைட்டி வருதுங்கிறது உண்மை. ஆஸ்திரேலியாவில் 16 வயசுக்குக் கீழ இருக்கிறவங்களுக்குச் சோஷியல் மீடியாவைத் தடை பண்ணிட்டாங்க. நம்ம ஊர்லயும் அதே மாதிரி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரணும். ஏன்னா, நாம சோஷியல் மீடியாவுக்கு 'யூசர்' கிடையாது, நாமதான் அங்க 'ப்ராடக்ட்'. நம்ம அட்டென்ஷனைதான் அவங்க விக்கிறாங்க.''

'விர்ச்சுவல் ஆட்டிசம்' (Virtual Autism) பத்தி இப்போ அதிகமா பேசுறாங்களே?

''ஆமா, குழந்தைகளுக்கு 5 வயசு வரைக்கும்தான் மூளை வளர்ச்சி அதிகமா இருக்கும். அந்த வயசுல ஒரு காக்காவை நேர்ல பார்க்காம ஸ்கிரீன்ல பார்த்தா, ரியாலிட்டிக்கும் விர்ச்சுவலுக்கும் உள்ள வித்தியாசம் குழந்தைகளுக்குத் தெரியாமப் போயிடும். இதனாலதான் குழந்தைகளுக்குச் ஸ்பீச் ப்ராப்ளம், கம்யூனிகேஷன் சிக்கலும் கூட வருது.''

கிராமத்துல இருக்குற பேரண்ட்ஸ்க்கு இதெல்லாம் தெரியாது இல்லையா.. அவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?

''ஒரு குழந்தையை அடிக்கக் கூடாதுங்கிறதுக்காக போனை கையில கொடுக்குறோம். ஆனா, போன் கொடுக்குறது குழந்தையை அடிக்கிறதை விட ஆபத்துன்னு புரிஞ்சுக்கணும். குழந்தைகளோட டேலன்ட்டை சோஷியல் மீடியாவால வைரல் ஆக்குறதுல பெற்றோர்களுக்கு ஆர்வம் ஜாஸ்தி. ஆனா ஃபேம் (Fame)-ஐ எப்படி ஹேண்டில் பண்ணனும்னு அவங்களுக்குத் தெரியாது. முடிஞ்ச வரைக்கும் குழந்தையை குழந்தையா இருக்க விடுங்க. முக்கியமா, பேரண்ட்ஸ் குழந்தைகளுக்கு ஃபிரண்டா இருக்கலாம், ஆனா ஒரு 'அத்தாரிட்டி’யும் (Authority) கண்டிப்பா இருக்கணும்.''

ஒரு கோர்ஸை ஸ்டூடன்ட் தேர்வு பண்ணும்போது எதை கவனிக்கணும்? இப்போ யூடியூப்ல நிறைய கவுன்சிலர்ஸ் வந்துட்டாங்களே?

''செல்ஃப் டிக்ளேர்ட் கரியர் கவுன்சிலர்ஸ் கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்களுக்கு பேசிக் நாலேட்ஜ் கூட இல்லாம ஏதோ ஒரு காலேஜ் பத்தி பேசுவாங்க. நீங்க உங்க சீனியர்ஸ் அல்லது ஸ்கூல் டீச்சர்ஸ் கிட்ட அட்வைஸ் கேளுங்க, சோஷியல் மீடியாவை மட்டும் நம்பி முடிவுகளை எடுக்காதீங்க.''

இந்திய மாணவர்கள் டேலன்ட்டடா இருந்தும் நாம ஏன் புதுசா எதையும் கண்டுபிடிக்க மாட்டேங்குறோம்?

''நம்ம ஊர்ல ரிஸ்க் எடுக்குற குணம் ரொம்ப கம்மி. தோத்துட்டா என்ன பண்றதுங்கிற பயம் அதிகம். அதனாலதான் அமெரிக்காவில சக்சஸான ஒரு ஐடியாவை அப்படியே இங்க 'காப்பி' பண்றோம். உதாரணத்துக்கு, அமேசான் போல பிளிப்கார்ட், டோர் டேஷ் போல ஸ்விக்கி. இங்க இன்னோவேஷனை விட கன்ஸ்யூமர் மார்க்கெட்டை எப்படிப் பிடிக்கலாம்னு தான் எல்லாரும் யோசிக்கிறாங்க. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா மேனுஃபாக்சரிங் மற்றும் ஆர் அண்டு டி (R&D) பக்கம் கவனம் திரும்புது.''

இன்னைக்கு எல்லாரும் ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கணும்னு நினைக்கிறாங்க... அவங்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?

''என்கிட்ட வர்ற இளம் தொழில்முனைவோர்கள் கிட்ட நான் சொல்றது ஒண்ணுதான்; பிடெக் முடிச்ச உடனே கம்பெனி ஆரம்பிக்காதீங்க. முதல்ல ஒரு இடத்துல வேலைக்குச் சேர்ந்து ஒரு ரெண்டு வருஷம் கத்துக்கோங்க. பிசினஸ்னா என்ன, ஒரு எம்ப்ளாயிக்கு இன்சூரன்ஸ் எப்படி எடுக்கணும், சம்பளம் எப்படிப் போடணும்னு அடிப்படையான விஷயங்கள் எல்லாத்தையும் அங்கதான் கத்துக்க முடியும்.''

வி.ஐ.டி-யை வசதியானவங்க படிக்கிற ஒரு இடமாத்தான் பார்க்குறாங்க. ஆனா, கிராமப்புற மாணவர்களுக்காக நீங்க என்ன பண்றீங்க?

''எங்க வேந்தர் ஒரு கிராமத்துப் பள்ளிக்கூடத்துல இருந்து வந்தவர்ங்கிறதால, அவருக்கு அந்த வலியும் கஷ்டமும் தெரியும். அதனாலதான் 2008-ல 'ஸ்டார்ஸ்' (STARS) திட்டத்தை ஆரம்பிச்சோம். தமிழ்நாடு, ஆந்திரா, மத்தியப் பிரதேசம்னு மாநிலங்கள்ல ஒவ்வொரு மாவட்டத்திலயும் அரசுப் பள்ளியில பிளஸ் டூ-ல முதல் மார்க் எடுக்குற ஒரு மாணவன், ஒரு மாணவிக்கு வி.ஐ.டி-ல முழுக்க முழுக்க இலவசக் கல்வி, தங்குமிடம், உணவு எல்லாமே கொடுக்கிறோம். மத்தியப் பிரதேசத்துல ஒரு பழங்குடியினப் பெண் இந்தத் திட்டத்துல சேர்ந்து படிச்சு, இப்போ மைக்ரோசாப்ட் கம்பெனியில வேலை வாங்கி இருக்காங்க.''

இப்போ இருக்குற AI யுகத்துல கோடிங், எக்செல்னு எல்லாத்தையும் மெஷினே பண்ணிடுது. அப்போ ஸ்டூடண்ட்ஸ் எதைக் கத்துக்கணும்?

''AI ஒரு டூல் மட்டும்தான். இப்போ ஒரு கன்பியூஷன் ஸ்டேட்ல நாம இருக்கோம். இந்த நேரத்துல மாணவர்களுக்குத் தேவையானது 'ஃபவுண்டேஷன்' (Foundation). அடிப்படை அறிவு ஸ்ட்ராங்கா இருந்தா எதையும் சமாளிக்கலாம். முன்னாடி ஜாவா கோடிங் தெரிஞ்சா வேலை கிடைச்சது, ஆனா இப்போ அது போதாது. நீங்க எந்தத் துறை எடுத்தாலும் அதோட வேர் வரைக்கும் தெரிஞ்சு வச்சிருக்கணும்.''

உங்க போபால் கேம்பஸ்ல புதுசா 'கால்டெக்' (CALTech) முறைன்னு பண்றீங்களாமே, அது என்ன?

''அது ஒரு 'ஆக்டிவ் லேர்னிங்' (Active Learning) முறை. முன்னாடி டீச்சர் சொன்னாத்தான் நமக்கு விஷயம் தெரியும், ஆனா இப்போ அப்படி இல்லை. அதனால டீச்சர்ஸை ஒரு 'கைடு' (Guide) போல மாத்திட்டோம். தியரி கிளாஸ் தனியா, லேப் தனியா இல்லாம, ரெண்டையும் ஒரே இடத்துல ஒண்ணா நடத்துறோம். பசங்க சும்மா உட்கார்ந்து கவனிக்காம, கையால செஞ்சு கத்துக்கறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி.''

உலக அளவில் டாப் 100 பல்கலைக்கழகங்கள்ல இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஏன் வர முடியறதில்லை?

''உலகளாவிய ரேங்கிங்ல சில முக்கியமான அளவுகோல்கள் இருக்கு. முக்கியமா, அந்தப் பல்கலைக்கழகத்துல எவ்வளவு சர்வதேச மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்காங்கன்னு பார்ப்பாங்க. இந்தியாவுக்கு வெளிநாட்டு மாணவர்கள் வர்றது கொஞ்சம் கம்மிதான். அப்புறம் அரசு ரிசர்ச்சிற்காகக் கொடுக்கிற நிதி (Funding) மத்த நாடுகளை விட இங்க ரொம்ப கம்மி (0.5% GDP). சீனாவெல்லாம் அவங்க யுனிவர்சிட்டிக்கு வருஷத்துக்கு 200-300 கோடி ரூபாய் வரைக்கும் ரிசர்ச்சிற்காகவே ஒதுக்குறாங்க. வி.ஐ.டி-யை பொறுத்தவரைக்கும் கடந்த 15 வருஷமா ரிசர்ச்ல அதிக கவனம் செலுத்துறோம். அதனாலதான் நேஷனல் ரேங்கிங்ல டாப்ல இருக்கோம்.''

சரி, உங்களுக்குப் பெரிய அளவில் நிதி கிடைச்சா எந்த ரிசர்ச்சிற்கு முன்னுரிமை கொடுப்பீங்க?

''ஒன்னு, வாட்டர் செக்யூரிட்டி (Water Security). தண்ணீர் பிரச்னைக்கு டெக்னாலஜி மூலமா தீர்வு காணணும். ரெண்டு, ஹெல்த் கேர் (Healthcare). கொரோனா காலத்துல நாம வேக்சின் தயாரிச்சு உலகத்துக்கே கொடுத்தோம், அந்த மாதிரி எண்ட்-டு-எண்ட் சர்வீஸ்ல இந்தியாவை ஒரு முன்னுதாரணமா மாத்தணும்.''

தமிழ்நாட்டுல 43% பெண்கள் வேலைக்குப் போறாங்க, ஆனா ஏன் பெரிய கம்பெனிகளுக்கு சி.இ.ஓ-க்களா வர்றது கம்மியா இருக்கு?

''பெண்கள் வேலைக்குச் சேர்ந்து நல்லாதான் போயிட்டு இருப்பாங்க. ஆனா, ஃபேமிலி ஸ்டார்ட் பண்ணும்போது ஒரு பிரேக் எடுக்க வேண்டிய சூழல் வருது. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு ஆணிடம் 'வேலைக்குப் போவியா?'ன்னு யாரும் கேட்கிறதில்லை, ஆனா பெண்களிடம் அது ஒரு கேள்வியாவே இருக்கு. அதேபோல, பல ஐ.டி வேலைகள் நைட்ல நடக்குது (Offshore timing), அதுவும் ஒரு தடையா இருக்கு. 40 வயசுக்கு மேல தான் மேனேஜரியல் பொறுப்புகள் வரும், அந்த நேரத்துல பல பெண்கள் வேலையிலேயே இருக்கிறதில்லை. கம்பெனிகள் சைல்டு கேர் (Child care) போன்ற வசதிகளைக் கொடுத்தா, திறமையான பெண்கள் மேல வர முடியும்.''

UPSC / TNPSC: 'வேலை பார்த்துக்கொண்டே போட்டித் தேர்வுக்கு தயாராகுவது எப்படி?' - இராம் பிரசாத் அறிவுரை

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'நீ... மேலும் பார்க்க

சமஸ்கிருத சர்ச்சை: மன்னிப்பு கோரிய உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம்!

கல்வியின் சிகரமாகக் கருதப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஒரு சமூக ஊடகப் பதிவினால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மொழிகளையும் கலாசாரங்களையும் ஆழமாகப் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனத்தின் கவனக்குறைவு உலக... மேலும் பார்க்க

போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? வழிகாட்டும் சைலேந்திர பாபு

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.நீங... மேலும் பார்க்க

+2 மாணவர்களே! - CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - முழு விவரம்!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவில் உள்ள 56 மத்திய பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், இந்தியா முழுவதுமுள்ள பல தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்த... மேலும் பார்க்க

ISRO : 9ம் வகுப்பு மாணவர்களே... இஸ்ரோ உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது! - முழு விவரம்

உலகமே திரும்பிப் பார்த்து வியக்கும் அளவுக்கு ISRO (Indian Space Research Organisation) விண்ணில் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறது. பல நாடுகள் முயன்றும் இயலாமல் போன நிலவுப் பயணத்தையும் ISRO சாத்தியப்படுத... மேலும் பார்க்க

UPSC / TNPSC: 'மாணவர்கள் இந்த மூன்று விஷயங்களை முதலில் செய்ய வேண்டும்.!'- பயிற்சியாளர் ஆதில் பெய்க்

'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.'UP... மேலும் பார்க்க