செய்திகள் :

கள்ளக்குறிச்சி: பெண் B.L.O தற்கொலை; வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிச்சுமை காரணமென கணவர் புகார்!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாகிதா பேகம், சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியில் இருந்தார்.

அதில் வாக்காளர்களுக்கு படிவம் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட படிவங்களை திரும்பப் பெறுதல் போன்ற பணிகளை செய்து வந்தார். கடந்த நவம்பர் 20-ம் தேதி வழக்கம்போல வேலைக்குச் சென்ற ஜாகிதா பேகம், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவரது கணவர் முபாரக் சாப்பாடு வாங்கி வருவதற்காக ஹோட்டலுக்குச் சென்றார். அதையடுத்து ஜாகிதா பேகம் வீட்டுக்குச் சென்ற அவரது உறவினர் ஒருவர், ஜாகிதா பேகம் ஊஞ்சல் சங்கிலியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து கூச்சலிட்டார்.

தற்கொலை செய்து கொண்ட ஜாகிதா பேகம்

அதைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ஜாகிதா பேகத்தை மீட்டு திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

அதையடுத்து ஜாகிதா பேகத்தின் உடல், உடற்கூராய்வு சோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தப்பணியால் ஏற்பட்ட அழுத்தம்தான் தன்னுடைய மனைவியின் தற்கொலைக்கு காரணம் என காவல் நிலையத்தில் புகார் எழுப்பியிருக்கிறார் முபாரக்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருக்கும் திருக்கோவிலூர் போலீஸார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி

தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக... மேலும் பார்க்க

சேலம்: திமுக பிரமுகர் சுட்டுக்கொலை; மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை; பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக கிளை செயலாளராக உள்ளார். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், ... மேலும் பார்க்க

`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடுத்த 4வது சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 11வது வகுப்பு படித்து வரும் மாணவி ஷாக்சி(17). இம்மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இர... மேலும் பார்க்க

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கண் பார்வை இழப்பு; பள்ளி நிர்வாகம் மீது வழக்கு

விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனின் இடது கண் பாதிக்கப்பட்டு செயல் இழந்துள்ளது.மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ளது எம்.புதுப்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் ம... மேலும் பார்க்க