செய்திகள் :

காஞ்சிபுரம்: மனைவியைக் கொலை செய்த கணவர்; சிக்கிய கணவர் - தவிக்கும் இரண்டு குழந்தைகள்

post image

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி கிராமம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கங்காதரனுக்கும் அவரின் மனைவி நந்தினிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மணிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சாலமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நந்தினி சென்றார். அப்போது மனைவியைத் தேடி கங்காதரன் அங்கு வந்தார். மதுபோதையிலிருந்த கங்காதரன், மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டு அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

கங்காதரன்

அதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கங்காதரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்தில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நந்தினி உயிரிழந்தார். அதனால் கங்காதரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீஸாருக்கு நந்தினியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து கங்காதரனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு கங்காதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அம்மா கொலை செய்யப்பட, அப்பா சிறைக்குச் செல்ல இவர்களின் இரண்டு மகன்களும் ஆதரவின்றி தவித்த காட்சி, காண்பவரை கண்கலங்க வைத்தது.

மனைவிக்கு ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவன்; 9 மாத போராட்டத்திற்கு பிறகு பெண் உயிரிழப்பு

பெங்களூரு அருகே உள்ள அத்திபேலே என்ற இடத்தில் வசித்தவர் வித்யா. இவரை அவரது கணவரும், அவரது மாமனாரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர்.திடீரென வித்யாவின் உடல் நிலை கடந்த மார்ச் ம... மேலும் பார்க்க

`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் - சுங்கத்துறை தீவிர விசாரணை

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதரா... மேலும் பார்க்க

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்

த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றும் போது ஏற்பட்ட க... மேலும் பார்க்க

`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்... மேலும் பார்க்க

திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணி... மேலும் பார்க்க