செய்திகள் :

காட்பாடி: பானிபூரி கடையில் ரூ.500 மாமூல் கேட்டு மிரட்டல்; 4 இளைஞர்கள் கைது

post image

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் வசிக்கும் சங்கர் (வயது 42) மற்றும் இவரின் உறவினர் நடராஜன் (32) ஆகியோர் காட்பாடியில் பானிபூரி கடை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி இவர்களின் பானிபூரி கடைக்கு வந்த சில இளைஞர்கள், "இது எங்க ஏரியா. இங்க கடைக்கு வைக்கணும்னா எங்ககிட்ட பர்மிஷன் வாங்கணும். இருந்தாலும் கேட்காம கடை வச்சிட்டீங்க. 500 ரூபாய் மாமூல் கொடுங்க" என்று மிரட்டியதோடு, தகாத சொற்களாலும் திட்டி கடைக்காரர்களைத் தாக்கியிருக்கிறார்கள்.

பானிபூரி கடைகளில் மிரட்டிய இளைஞர்கள்
பானிபூரி கடைகளில் மிரட்டிய இளைஞர்கள்

இதுதொடர்பாக, கடை வியாபாரி சங்கரின் மாமியார் காசியம்மாள் காட்பாடி காவல் நிலையம் சென்று புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் மாமூல் கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

விசாரணையில், காட்பாடி கே.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்த எபி என்கிற ராகுல் (21), குமரப்பா நகரைச் சேர்ந்த சந்தோஷ் (25), காட்பாடியைச் சேர்ந்த மணி (22), செங்குட்டையைச் சேர்ந்த ஆகாஷ் (26) எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்த போலீஸார், நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மதுரை: கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு; ரத்தம் சொட்ட சொட்ட கிராமத்தில் தஞ்சம் புகுந்து மாணவர்கள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்குமார் (18) இவர் தனது நண்பருடன் மேலூரிலுள்ள தனியார் கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.அலங்காந... மேலும் பார்க்க

Gem வீரமணி வழக்கு: "யாரும் தப்பிவிடக்கூடாது" - சென்னை கமிஷனருக்கு முதல்வர் விஜய் நேரடி உத்தரவு

ஜெம் குழுமத்தின் தலைவர் ஆர். வீரமணி. இவருக்கு வயது 84.சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார் என்று போக்சோ வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.வீரமணியிடம் சிறுமிகளை அழைத்துச்... மேலும் பார்க்க

நெல்லை: பகலில் மீன்கடைத் தொழிலாளி; இரவில் பெண்களின் உள்ளாடைகள் திருடன் - இளைஞர் சிக்கியது எப்படி?

நெல்லை மாநகரில் சமீப காலமாகவே வீடுகளில் கொடிகளில் காயப் போட்டிருந்த பெண்களின் உள்ளாடைகள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக திருடு போய்க் கொண்டிருந்தன. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மகளிர் தங்கும் விடுத... மேலும் பார்க்க

'எண்ணெய்யில் பொறித்த மீன்; பார்சலில் ஈர வெங்காயம்'- விவசாயியிடம் லஞ்சமாக கேட்ட VAO பணியிடை நீக்கம்!

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக கார்த்திக் என்பவர் பணியில் இருந்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி வங்கியில் கடன் பெறுவதற்காக சிட்டா கேட்டு விண்ணப்ப... மேலும் பார்க்க

”டூவீலரில் 229 கிலோ மீட்டர், திருட்டு நகையில் ஜாலி டூர்”- செயின் பறித்த நண்பர்கள் சிக்கியது எப்படி?!

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிருபாமலர் இவரது கணவர் டாக்டர். கடந்த 8ம் தேதி மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, டூவீலரில் வந்த இருவர் நிருபாமலர் ... மேலும் பார்க்க

ஓசூர்: வழி கேட்பது போல் நடித்து பெண்களிடம் நகைப் பறிப்பு; சிக்கிய கர்நாடக தபால்காரர்!

காரில் வந்து வழிகேட்பது போல் நடித்து 4 பெண்களிடம் நகை பறித்த கர்நாடக மாநில தபால்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க சங்கிலி பறிப்பு!கிருஷ்ணகிரி மாவட்டம் த... மேலும் பார்க்க