செய்திகள் :

குளிர்காலத்தில் சருமத்தை எப்படி பராமரிக்க வேண்டும்? - வழிகாட்டும் பியூட்டி தெரப்பிஸ்ட்!

post image

பொதுவாக குளிர் காலம் என்பது அதிக நாட்கள் நீடித்திருப்பது இல்லை. இருந்தாலும் இந்த சிறிய இடைவேளையில் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விடும். குளிர் காலம் தொடங்கும் நேரத்தில் நம்முடைய தோல் அதிகமாக வறண்டு போகும்.

குளிர் காற்று, குறைந்த ஈரப்பதம், அதிக வெப்பநிலை மாற்றம் ஆகியவை தோலின் இயற்கை எண்ணெயைக் குறைக்கின்றன. அதனால் பொடுகு போல் உரியும் சருமம், அதனால் ஏற்படும் எரிச்சல், முடி உதிர்தல் மற்றும் பொலிவு இழப்பு போன்றவை கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஏற்படும்.

இவற்றைத் தடுக்க, நம்முடைய தினசரி ஸ்கின் கேரில் சில மாற்றங்கள் அவசியமாகிறது. இதற்காக பியூட்டி தெரப்பிஸ்ட் வசுந்தரா, 12 குளிர்கால ஸ்கின் கேர் டிப்ஸை இங்கே வழங்கியுள்ளார்.

முகம் மற்றும் உடலுக்கேற்ற மாய்ஸ்ரைசர்

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

1. முதல் முக்கியமான விஷயம் மாய்ஸ்ரைசர். குளிர்காலத்தில் சருமம் சுலபமாக ட்ரை ஆகி விடும். முகத்திற்கேற்ற மாய்ஸ்ரைசர் மற்றும் உடலுக்கேற்ற மாய்ஸ்ரைசர் என கவனமாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஷியா பட்டர் உள்ள மாய்ஸ்சரைசர் உடலுக்கு பயன்படுத்தினால் நல்லது. முகத்திற்கு கொழுப்பு சக்தி (Fat Content) குறைவாக இருக்கும் மாய்ஸ்சரைசர் நல்லது.

ஃபோமிங் கிளென்ஸர் பயன்படுத்தக்கூடாதா?

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

2. முகத்துக்கு மென்மையான கிளென்ஸர் பயன்படுத்த வேண்டும். ஃபோமிங் கிளென்ஸர் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம். ஃபோமிங் கிளென்ஸர் முகத்தை நன்கு சுத்தம் செய்யும். அதே சமயம் சருமத்தின் இயற்கை எண்ணெய்ப்பசையை அகற்றிவிடும், எனவே சருமம் மேலும் வறண்டு போகும். இதற்கு மென்மையான கிளென்சர் பயன்படுத்துவதுதான் தீர்வு.

10 நாட்களுக்கு ஒருமுறை போதும்!

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

3. பொதுவாக குளிர்காலத்தில் முகத்தை ஸ்கிரப் செய்வதை தவிர்த்துவிடலாம். அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம். கடலை மாவு, பச்சைப்பயிறு மாவே ஸ்கிரப் செய்ய போதுமானது.

குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் தேவையில்லையா?

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

4. குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் தேவையில்லை என்று பலர் நினைப்பார்கள். மழை, வெயில், குளிர் என அனைத்து காலங்களிலும் சன்ஸ்கிரீன் அவசியம் பயன்படுத்த வேண்டும்.

இயற்கையாக தயாரிக்கப்பட்ட லிப் பாம்

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

5. இந்தக் காலநிலையில் உதடுகள் வறண்டு போகும். எனவே லிப் பாம் பயன்படுத்துவது நல்லது. நறுமணம், நிறம் சேர்க்காமல், ஷியா பட்டர் அல்லது பீட்ரூட் மூலம் இயற்கையாக தயாரிக்கப்பட்ட லிப் பாம் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சரி!

குளிர்கால சருமப்பராமரிப்பு
bathing

6. குளிர்காலத்தில் பலரும் சுடச்சுட வெந்நீரில் குளிப்பார்கள். அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். முடி, சருமம் என அனைத்திற்கும் எரிச்சலூட்டும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே சரி.

முகத்தில் சுருக்கம் வராமல் இருக்கும்!

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

7. குளிர் காலத்தில் பெரும்பாலும் தாகம் எடுக்காது. அதனால் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலின் நீர்ச்சத்துக் குறைந்து விடும். தேவையான அளவு தண்ணீர்க்குடிக்க, உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி, முகத்தில் சுருக்கம் வராமல் இருக்கும்.

செராமைடு, நியாசினமைடு, ஸ்குவாலீன், கற்றாழை

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

8. ஸ்கின் கேரில் பயன்படுத்தும் சீரம், க்ரீம், மாய்ஸ்ரைசர் இவற்றில் செராமைடு, நியாசினமைடு, ஸ்குவாலீன், கற்றாழை போன்ற பொருட்கள் இருக்க வேண்டும். சாதாரன க்ரீம்களை வாங்குவதைவிட இதுபோன்ற பயனுள்ள பொருட்கள் இருப்பதைப் பார்த்து வாங்குவது நல்லது.

வாழைப்பழம் அல்லது அவகேடா

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

9. இத்தனை செய்தும், சருமம் உலர்ந்துபோனால், வாழைப்பழம் அல்லது அவகேடாவை பாலுடன் அரைத்து, முகத்தில் பூசினால், இவற்றில் இருக்கும் ஈரப்பதம், சருமத்தை ஹைடிரேட்டாக வைத்துக்கொள்ளும்.

தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆர்கன் எண்ணெய்

குளிர்கால சருமப்பராமரிப்பு
Hair

10. குளிர்காலத்தில் தலைமுடிக்கும் அதிக கவனம் செலுத்த வேண்டும். குளிரில் சுலபமாக ட்ரை ஆகி அதிகம் உதிரும். இதற்கு மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயை (தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆர்கன் எண்ணெய்) தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் ரத்தவோட்டம் சீராகி, முடி உதிர்தல் குறையும். தவிர, சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.

கம்பளி ஆடைகள்

குளிர்கால சருமப்பராமரிப்பு
குளிர்கால சருமப்பராமரிப்பு

11. குளிர்காலத்தில் கம்பளி உடைகளை உடுத்த விரும்புவோம். நம் ஊர்களில் காட்டன் பயன்படுத்துவதே நல்லது. அல்லது காட்டன் துணியை உள்ளே வைத்து தைக்கப்பட்ட கம்பளி ஆடைகளை அணியலாம். சருமம் எரிச்சலடையாமல் இருக்கும்.

கிளென்ஸர், மாய்ஸ்ரைசர், சீரம்

12. காலை, இரவு என இருவேளையும் கிளென்ஸர், மாய்ஸ்ரைசர், சீரம் பயன்படுத்தி ஸ்கின் கேர் வழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். சமீப நாட்களில் பலரும் Humidifier பயன்படுத்துகிறார்கள். அது இதுபோன்ற வறண்ட காலத்திலும், ஈரப்பதத்தை தக்கவைத்து, ஸ்கின் ட்ரை ஆகாமல் பாதுகாக்கும்.

முகச்சுருக்கம் முதல் சீக்காளி கூந்தல் வரை; முதுமையை விரட்டும் பழம்!

வயோதிகத்தை விரட்டி இளமையைத் தக்க வைக்கும் அற்புதப் பழம் பப்பாளி. எல்லா விதமான சருமத்துக்கும் ஏற்ற பப்பாளியின் பலன்களை சொல்கிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.1. சொர சொர முகத்துக்கு... papaya beauty t... மேலும் பார்க்க

Menstrual Masking: மாதவிடாய் ரத்தத்தை பூசினால் முகம் பொழிவாகுமா? - எச்சரிக்கும் மருத்துவர்

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில விசித்திரமான அழகுக்குறிப்புகள் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் பரவி வருகிறது. 'மென்ஸ்ட்ருவல் மாஸ்கிங்' (Menstrual Masking) என்று அழைக்... மேலும் பார்க்க

`புருவம் த்ரெட்டிங் முதல் கூட்டுப்புருவம் வரை' - அழகுக்கலை நிபுணர் டிப்ஸ்

''பியூட்டி பார்லர் பக்கமெல்லாம் நான் போறதே இல்லப்பா...' என்று சொல்லும் பெண்கள்கூட, கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான். இதற்கு டீன் ஏஜ்,. மிடில் ஏஜ், ஓல்டு ஏஜ் என... மேலும் பார்க்க

சருமம் முதல் தாடி, மீசை பராமரிப்பு வரை; டீன் ஏஜ் பாய்ஸ்‌க்கு பியூட்டி டிப்ஸ்!

டீன் ஏஜ் பாய்ஸுக்கான எளிய குரூமிங் டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி. உணவு டீன் ஏஜ் பாய்ஸுக்கு பியூட்டி டிப்ஸ்பால் பொருள்கள், முட்டை, இறைச்சி, மீன், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வக... மேலும் பார்க்க