குழந்தைகளுக்கு பட்டாசு வழங்கி தீபாவளி வாழ்த்து சொன்ன முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, குழந்தைகளுக்கு மகிழ்வுடன் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி. குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பட்டாசுகள் பெட்டிகளை வாங்கிச் சென்றனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது தனது வீட்டின் அருகில் வசிக்கும் குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்து பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதையும் படிக்க |மின்சாரம் தாக்கி பலியான காவல் ஆய்வாளர்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று(அக்.31) தனது வீட்டின் அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கு மகிழ்சியுடன் பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இவற்றை வாங்க அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஏராளமான குழந்தைகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். முதல்வர் ரங்கசாமியும் சலிக்காமல் நீண்ட நேரம் காத்திருந்து குழந்தைகள் அனைவருக்கும் தனது கையால் பட்டாசுகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.