செய்திகள் :

கோவில்பட்டி: போர் சூழலால் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம்; தொழிலாளர்கள் பாதிப்பு

post image

’கடலை மிட்டாய்’ என்றாலே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிதான் நினைவுக்கு வரும்.

கடந்த 2020-ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்ற பின்னர் வெளி மாநிலங்கள், வெளி நாடுகள் எனக் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை அதிகரித்துள்ளது.

கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் 120 கடலை மிட்டாய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். உற்பத்தி செய்யப்படும் கடலை மிட்டாயில் 70 சதவீதம் வளைகுடா நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடலை மிட்டாய்
கடலை மிட்டாய்

இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடந்து வரும் வளைகுடா போர் காரணமாக கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கண்ணனிடம் பேசினோம், “சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீர்கம் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் மூலமும், கப்பல் மூலமும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

இந்தப் போர் காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலைமிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுவது முற்றிலும் தடைபட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால், சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் தேக்கம் அடைந்துள்ளன.

கடலை மிட்டாய் உற்பத்தி
கடலை மிட்டாய் உற்பத்தி

அத்துடன் உற்பத்தி முடங்கும் சூழலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளன. பெட்ரோலியப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதால், பி.பி. கவர், பிளாஸ்டிக் ஜார் உள்ளிட்டவையின் விலையும் ஏற்றம் அடைந்துள்ளது.

ஏற்கெனவே நிலக்கடலையின் விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள போர் கடலை மிட்டாய் உற்பத்தியைப் பாதிக்கிறது” என்றார்.   

கோவில்பட்டி: ஈரான் – இஸ்ரேல் போரால் மூலப்பொருட்கள் விலை உயர்வு; தீப்பெட்டித்தொழில் முடங்கும் அபாயம்

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்... மேலும் பார்க்க

'300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி

அமெரிக்கா டெக்சாஸில் வர உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தனது இந்திய கூட்டாளிகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 'நன்றி' தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: பங்குச்சந்தையில் நிமிடங்களில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு!

வளைகுடா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. ஈரான் தனது நாட்டு எல்லையில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழித்தடத்தை அடைத்ததால் அந்த வழியாக கச்சா என்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் ப... மேலும் பார்க்க

அழிந்து வரும் நாட்டு கழுதைகளை வளர்க்க மத்திய அரசு ரூ.50 லட்சம் மானியம்! - முழு விவரம்!

தேசிய கால்நடை வளர்ப்பு திட்டத்தில், கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களைத் தொடங்க இந்திய அரசு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. கழுதை வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைத் தொழில்களில் ஈடுபட நினைக்கும் ... மேலும் பார்க்க

`ஸ்டால் ஒதுக்கீடு டு கொலாபரேஷன்..!' - - பிசினஸ் ஸ்கேம்களில் சிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிவை!

ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பு சிறு குறு தொழில்கள்தான். ஆனால் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மோசடி. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ் என தொழில் வளர்ந்தாலும், அதனுட... மேலும் பார்க்க