செய்திகள் :

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

post image

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்ததும், அவரது நண்பரான மோகன் குற்றத்தை மறைக்க உதவியதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது கார்த்திக் தப்பியோட முயன்றபோது, கட்டடத்தில் இருந்து கீழே விழுந்ததில் வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நேற்று முன்தினம் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிறைக்குள் கார்த்தி மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஸ்பூன், தட்டு  உள்ளிட்ட பொருள்களால் தாக்குதல் நடத்தியதில், பலத்த காயம் அடைந்த கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 மாத திட்டம்; க்ரைம் படங்கள் - தாயை துன்புறுத்திய தந்தை, சித்தி உட்பட 4 பேரை கொன்று எரித்த மைனர்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவி... மேலும் பார்க்க

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை... மேலும் பார்க்க

புனேயில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மகாராஷ்டிரா வில் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் சிஞ்ச்வாட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கள்ளச்சாராயம் குடித்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் கள்ளச்சாராயத்தால் 8 பேர் உயிரிழந்தனர். ... மேலும் பார்க்க

சென்னை: சிறுவனுக்குப் பாலியல் தொல்லை; பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர்!

வடபழனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் வேலப்பன் என்பவர், சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

திருவள்ளூர்: குடிக்கத் தண்ணீர் கேட்ட வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை - மூவரிடம் போலீஸ் விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் பகுதியில் உள்ள ராமராஜன் கண்டிகை கிராமத்தில் பெண் ஒருவர் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அந்தப் பெண் வீட்டின் வெளிபக்க இரும்பு கேட்டை வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்... மேலும் பார்க்க

கணவர், அவரின் 2-வது மனைவி உட்பட 4 பேரை கொன்று எரித்த பெண்; கதறி அழுது நாடகம்... சிக்கியது எப்படி?!

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் அருகில் உள்ள ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்தவர் ராம் சிங் செளதரி. முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம் சிங் 2005ம் ஆண்டு சுனிதா என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணத்தின் ம... மேலும் பார்க்க