செய்திகள் :

"சமைப்பதும், சுத்தம் செய்வதும் பெண்களின் வேலையில்லை" - பிரியங்கா சோப்ரா

post image

வீட்டு வேலைகளைச் செய்வதில் ஆண் - பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

சமையல் மற்றும் சுத்தம் போன்ற வேலைகளை ஒரு பெண்ணின் கடமையாகப் பார்க்கக்கூடாது என்றும், அதற்குப் பதிலாக, பாலின பாகுபாடு பார்க்காமல், ஒவ்வொரு வயது வந்தவரும் செய்ய வேண்டிய அத்தியாவசிய பணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரியங்கா சோப்ரா இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ''பெண்கள் வீட்டுப் பொறுப்புகளை நிர்வகிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் பெரும்பாலும் அவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

வீட்டு வேலைகளை பாலினத்துடன் இணைக்கக்கூடாது. சுத்தம் செய்வதும், சமைப்பதும் பெண்களின் வேலையல்ல. அவை வயது வந்தோருக்கான அடிப்படை வேலை. சோம்பேறித்தனத்துடன் பாலினத்தைக் குழப்ப வேண்டாம்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா

பொழுதுபோக்குத் துறையை தொழில்நுட்பம் பெரிய அளவில் மாற்றியுள்ளது. திரைப்படத் தயாரிப்பு முன்பை விட எளிதாகி இருக்கிறது. நீங்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்க விரும்பினால், நீங்கள் எந்தத் துறையில் இருக்க விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

தொழில்துறையில் நுழைவது மிகவும் கடினமானது. டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான எதார்த்தத்தை மாற்றிவிட்டது. படைப்பாளிகள் பாரம்பர்ய தொழில் கட்டமைப்புகளை நம்பாமல் நேரடியாக பார்வையாளர்களிடம் தங்கள் கருத்துக்களைக் கொண்டு வர அனுமதிக்கிறது.

இப்போது உங்களுக்கு ஒரு யோசனை இருப்பதாக உணர்ந்தால், அதை வீடியோவாக மாற்றி அதை யூடியூப்பில் வெளியிடலாம்'' என்று தெரிவித்தார்.

பிரியங்கா சோப்ரா சினிமாவில் மிகவும் பிஸியான இருக்கிறார். புதிய படம் ஒன்றில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து செயல்படப் போவதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார். இது தவிர பிரியங்கா அடுத்ததாக எஸ்.எஸ்.ராஜமௌலியின் வாரணாசி படத்தில் மகேஷ் பாபு மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார்.

களைகட்டிய சரத் பவார் பேத்தியின் திருமணம்; நடனமாடிய 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக் கான்!

தேசியவாத காங்கிரஸ் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகள் சுப்ரியாசுலேயின் மகள் ரேவதிக்கு இன்று திருமணம் நடந்தது. அவர் தொழிலதிபர் சரங் லகானியைத் திருமணம் செய்தார். இதையொட்டி நேற்று இரவு சிறப்பு இசை நிகழ்ச்சிக... மேலும் பார்க்க

பாலிவுட் நடிகர் குடும்பத்திடம் ரூ.16 கோடி மோசடி; மும்பை மாநகராட்சி உதவி கமிஷனர் தலைமறைவு

மும்பை மாநகராட்சியில் உதவி கமிஷனராக இருந்தவர் மகேஷ் பாட்டீல். இவர் பாலிவுட் நடிகர் ஜாவேத் ஜாஃப்ரி குடும்பத்தினரிடம் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி பிரிட்டன... மேலும் பார்க்க

Mouni Roy: ``நான் லெஸ்பியனா?" - விவாகரத்துக்குப் பிறகான வதந்தி குறித்து நடிகை மௌனி ராய்

நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகை மௌனிராய். இவர் தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தொழிலதிபர் சூரஜ் நம்பியார் என்பவருக்கும் - நடிகை மௌனி ராய்-க்கும... மேலும் பார்க்க

"சச்சின், கோலியை விட சிறப்பாக விளையாட வேண்டும்" - சூர்யவன்ஷியை வாழ்த்திய கங்கனா ரனாவத்

நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய 15 வயதுடைய இளம் வீரரான சூர்யவன்ஷி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த சீசனில் 16 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 5 அரை ... மேலும் பார்க்க

Aamir Khan: ஷாருக்கான், சல்மான் கான் முன்னிலையில் திருமணம்; கௌரியை மணமுடிக்கும் ஆமீர் கான்!

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் விவாகரத்து செய்த பிறகு இரண்டு முன்னாள் மனைவிகளிடமும் சுமூக உறவை பேணி வரும் ஆமீர் கான் கடந... மேலும் பார்க்க

'என்னை நானே பலமுறை துன்புறுத்தி இருக்கிறேன், ஆனால்.!'- உடற்பயிற்சி குறித்து டாப்ஸி அட்வைஸ்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையான டாப்ஸி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.சமீபத்தில் அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் வெளி​யானது.தொ... மேலும் பார்க்க