`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம்...
'சாய் சுதர்சன் மட்டும் நின்னுருந்தா சீனே வேற..!' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் பெங்களூரு vs குஜராத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 255 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், அந்த அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்த தோல்வியின் மூலம், குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாட வேண்டிய கட்டாயம் குஜராத் அணிக்கு உருவாகியுள்ளது. இந்த போட்டிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:
“பிட்ச் இப்படி இருந்தது எங்களுக்கு ஆச்சரியமா என்று கேட்டால், உண்மையில் இல்லை. 12வது, 13வது ஓவர் வரை நாங்கள் போட்டிக்குள் நன்றாகவே இருந்தோம். ஆனால் எங்களுடைய பீல்டிங் சரியாக இல்லை. சில கேட்ச்களை தவறவிட்டோம்.
இந்த போட்டியில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த போட்டியை நாங்கள் மறந்து விட்டு, புதிதாக தொடங்க விரும்பும் போட்டிகளில் இதுவும் ஒன்று. பீல்டிங் தவறுகள் குறித்து, நிச்சயமாக அணிக் கூட்டங்களிலும் பயிற்சியிலும் பேசுவோம். ஆனால் இன்று எங்களுக்கான நாளாக இல்லை என்று நினைக்கிறேன்.
அழுத்தமான சூழ்நிலைகளில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. சேஸிங் செய்யும்போது நம்பிக்கை இருந்ததா என்றால்... இந்த மைதானத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தால் எந்த இலக்கையும் துரத்த முடியும்.

பவர் ப்ளேயில் சிறப்பாக தொடங்கியிருந்தால், இந்த பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்டை கருத்தில் கொண்டால், இந்த இலக்கை எட்டியிருக்கலாம்.
சாய் சுதர்சன் அவுட் ஆன விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்படிப்பட்ட அவுட்டை அடிக்கடி பார்க்க முடியாது. அது எங்களுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது” என்று கூறினார்.
















