BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?
சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது
சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி–ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே இரு இளைஞர்கள் சண்டையிடுவது போல் நடித்து வீடியோ பதிவு செய்துள்ளனர்.
அப்போது அவ்வழியே டூ-வீலரில் சென்ற நபர் சண்டையை உண்மையென நினைத்து பார்த்தபோது, பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த தனியார் பேருந்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
பைக் விபத்தில் சிக்கியதை பார்த்த இளைஞர்கள் இருவரும் சிரித்துக் கொண்டு வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மல்லி போலீஸார், சிவகாசி அருகே அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜன் மற்றும் வடபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வீடியோ எடுத்த நபரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

















