BB Tamil 9: நாமினேஷன் லிஸ்டில் 13 பேர்! இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர்?
சிவகாசி: மின்வாரியத்தில் கத்தை கத்தையாக பணம் எண்ணிய அதிகாரி, லஞ்சமா? - பணியிடை நீக்கம்
சிவகாசியில் மின்வாரியத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் பணம் எண்ணும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வந்தவர் பத்மா. இவர் பணிநேரத்தில் தனது அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு பணத்தை கத்தை கத்தையாக எண்ணும் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், புதிய மின் இணைப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன், பத்மாவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, அனுப்பங்குளத்தில் மின்வாரிய செயற்பொறியாளராக பணியாற்றி வரும் பாபநாசத்தை சிவகாசி செயற்பொறியாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.















