மொழிப்போர் தியாகிகள்: ``மரியாதை செலுத்த உங்கள் காங்கிரஸ் ஏன் வரவில்லை?" - கேள்வி...
"சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" - மிரட்டிய ட்ரம்ப்; வீடியோ வெளியிட்ட கனடா பிரதமர்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது ட்ரம்ப் அதிரடியாக வரி விதித்து வருகிறார்.
அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க பல்வேறு நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் கனடா சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
பேச்சுவார்த்தையின் முடிவில் வேளாண் பொருட்கள், மின்சார வாகனங்கள் தொடர்பாக சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டது.
இந்நிலையில், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை கனடா அமல்படுத்தினால் கனடா மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு பிறகு கனடா பிரதமர் மார்க் கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் அவர், "வெளிநாட்டு அச்சுறுத்தலைச் சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம். கனடாவைக் கட்டமைப்போம்.
மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுபடுத்த முடியாது. எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம். சுயசார்பு கனடாவை உருவாக்குவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.












