செய்திகள் :

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

post image

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகியோர் குடியிருந்து வந்தனர். அதனால் பார்த்தசாரதியின் குடும்பமும் சுசில் குடும்பமும் பழகி வந்தனர்.

இந்தநிலையில் பார்த்தசாரதியின் மனைவி ஜமுனாவுடன் சுசில் நெருங்கிப் பழகி வந்தார். அதை பார்த்தசாரதி கண்டித்தார். அதனால் பார்த்தசாரதிக்கும் ஜமுனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கணவரைப் பிரிந்து ஜமுனா சென்றுவிட்டார். மனைவி பிரிந்ததற்கு சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி கருதினார். அதைத் தொடர்ந்து சுசிலுக்கும் பார்த்தசாரதிக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

கொலை
கொலை

இந்நிலையில் 15.02.2026- ம் தேதி மது போதையில் பைக்கில் பார்த்தசாரதி வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு சுசில், தன்னுடைய பைக்கை அங்கு நிறுத்தியிருந்தார். அதனால் பார்த்தசாரதியால் பைக்கை அங்கு நிறுத்த முடியவில்லை. அதனால் பார்த்தசாரதி, சுசில் வீட்டுக்குச் சென்று வாக்குவாதம் செய்தார். அப்போது சுசிலும் பார்த்தசாரதியுடன் தகராறு செய்தாகக் கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி, தன்னுடைய வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துக் கொண்டு வந்தார். பின்னர், சுசிலின் வயிற்றில் கத்தியால் குத்தினார். அதனால் அலறிய சுசிலின் சத்தம் கேட்டு அங்கு வந்த கிரிஜா, பார்த்தசாரதியை தடுக்க முயன்றார். அதனால் கிரிஜாவையும் பார்த்தசாரதி கத்தியால் குத்தினார். இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். பின்னர் பார்த்தசாரதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்குப் போராடிய கணவன் மனைவியை மீட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதோடு கானாத்தூர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கானத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீஸார், விசாரணை நடத்தினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சுசில், அவரின் மனைவி கிரிஜா அடுத்தடுத்து உயிரிழந்தனர். அதனால் கொலை வழக்கு பதிந்த கானாத்தூர் போலீஸார், கணவன், மனைவி என இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக பார்த்தசாரதியை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் என் மனைவி என்னை விட்டு பிரிந்து செல்ல சுசில்தான் காரணம் என பார்த்தசாரதி விசாரணையில் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

பார்த்தசாரதி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட சுசிலுக்கு பார்த்தசாரதியின் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக தெரிகிறது. அதனால்தான் பார்த்தசாரதியின் மனைவி அவரைப்பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்து வந்த பார்த்தசாரதிக்கு, சுசில் மட்டும் மனைவியுடன் வாழ்ந்து வருவது ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. சம்பவத்தன்று மதுபோதையிலிருந்த பார்த்தசாரதி, சுசிலை கொலை செய்ய கத்தியால் குத்தியிருக்கிறார். அதை சுசிலின் மனைவி ஜமுனா தடுத்ததில் அவருக்கும் கத்தி குத்து விழுந்திருக்கிறது. தற்போது இரட்டை கொலை வழக்கில் பார்த்தசாரதியை கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

ஆவியிடம் மன்னிப்பு; காதலியை கொலை செய்து பிணத்துடன் உறவு - மும்பையில் பதுங்கி இருந்த காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ. படித்து வந்த 24 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது காதலன் பியூஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபி... மேலும் பார்க்க

கமுதி: கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (67). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி(60) இவர்களது மகன் சோலைசெல்வம்(30), இவரது மனைவி கோகிலா(32) மற்றும் இவர்களது இரு குழந்தைகள் உள்ளிட்ட ஆ... மேலும் பார்க்க

கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு ... மேலும் பார்க்க

ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூ... மேலும் பார்க்க