செய்திகள் :

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

post image

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா.

இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

5 வயதான ஹர்சன் ராஜை வாசுதேவன் பராமரித்து வரும் நிலையில், ஒன்றரை வயது புவன் ராஜை தாய் லலிதா பராமரித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் புவன் ராஜிற்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தள்ளார். சிகிச்சை பலனின்றி குழந்தை புவன் ராஜ் உயிரிழந்துள்ளான்.

குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் உடற்கூறாய்வுக்கு உடலை அனுப்பியுள்ளனர். விஷம் கலந்த உணவை உட்கொண்டதே குழந்தையின் இறப்புக்குக் காரணம் என்பது உடற்கூறு ஆய்வுகளின் முடிவில் தெரிய வந்திருக்கிறது.

தாய் லலிதா
தாய் லலிதா

இது குறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தகாத உறவுக்கு குழந்தை இடையூறாக இருப்பதால் தாய் லலிதாவே உணவில் விஷம் வைத்து கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய் லலிதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், "கட்டட வேலைக்குச் சென்று வந்த லலிதாவிற்கு கட்டடத் தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தகாத உறவுக்கு குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதி சாப்பிட்டில் விஷம் வைத்து குழந்தைக் கொன்றதுடன், வலிப்பு வந்ததாக நாடகமாடியிருக்கிறார். மருத்துவ ஆய்வில் தெரியவந்ததும் உண்மையை ஒப்புக்கொண்டார். கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்‌" என்றனர்.

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க

சேலம்: பண உதவி செய்வதாக ஏமாற்றி 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த தவெக நிர்வாகி - அதிர்ச்சி பின்னணி

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். த.வெ.க ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 16 வயது சிறுவன் கைது!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில... மேலும் பார்க்க

காய்கறிகளுக்கு இடையே ரகசியமாக கஞ்சா செடி வளர்ப்பு – ஒடிசா மாநில தொழிலாளி சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாதாபெனந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தடாகம் அருகேயுள்ள பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்... மேலும் பார்க்க