செய்திகள் :

ஜவ்வாது மலை: அதானி மின் திட்டம்; ஒன்றிய அரசு அனுமதி! - பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள்

post image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம், அதானி குழுமத்திற்குச் சொந்தமான அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதற்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை

அதில், "வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் அமையவுள்ள அதானி நிறுவனத்தின் நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (Environmental Impact Assessment) செய்வதற்கான ஆய்வு எல்லைகளை (Terms of Reference) வழங்கியுள்ளது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

கௌதம் அதானி
கௌதம் அதானி

மத்திய அரசின் அனுமதி; பாதிக்கப்படும் மலைப்பகுதிகள்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அரசம்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் 15.06.2026 அன்று அதானி குழுமத்திற்குச் சொந்தமான அதானி ஹைட்ரோ பவர் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இத்திட்டத்தால் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதிகள் பாதிக்கப்படும் என எச்சரித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் விரிவான அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி அதானி நிறுவனத்தின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பல்வேறு நிபந்தனைகளுடன் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை அதானி நிறுவனத்துக்கு வழங்கப் பரிந்துரைத்துள்ளது.

அச்சுறுத்தல்!

ஆய்வு எல்லைகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிபந்தனைகளுள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு அறிக்கை 2006ன் படி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும், திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படவுள்ள காப்புக்காடுகளுக்கான வனத்துறை அனுமதி கோரி 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பகுதியில் 228.352 எக்டேர் நிலப்பகுதி அரசம்பட்டு காப்புக்காடுகளுக்கு உட்பட்ட பகுதியாகும். அடர்க்காடுகள், புதர்க்காடுகள் ஆகியவற்றைக் கொண்ட இக்காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளதால் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதானி நிறுவனத்துடனான தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்:

07.01.2024 அன்று தமிழ்நாடு அரசுடன் அதானி கிரீன் என்ற நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி அல்லேரி, தென்மலை ஆழியார் ஆகிய இடங்களில் நீரேற்றுப் புனல்மின் நிலையம் அமைக்கும் திட்டங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அல்லேரியில் அமைக்கப்படவுள்ள நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ பவர் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாகக் காணப்படும் சாம்பல் இருவாச்சி / மலபார். சாம்பல் இருவாச்சி (Malabar Grey Hornbill) இத்திட்ட அமைவிடத்தில் காணப்படுகிறது. இது மிகவும் அரிதானதாகும். கூகை / வெண்முதுகு ஆந்தை (Indian Barn Owl) மற்றும் புள்ளி ஆந்தை (Spotted Owlet) உள்ளிட்ட 8 வகையான ஆந்தைகள் இங்கு காணப்படுவதும் மிக அரிதானதாகும்.

இலங்கை மாந்தாப் பாம்பு (Sri Lankan Flying Snake), மலபார் குழி விரியன் (Malabar Green Pit Viper) உள்ளிட்ட முக்கியமான பாம்புகளும், இப்பகுதிக்கே உரித்தான தனித்துவமான மற்றும் ஜவ்வாது மலையின் பெயரால் உலக அளவில் அழைக்கப்படும் ஜவ்வ (Jawadhu leaf-litter skink - Dravidoseps jawadhuensis) உள்ளிட்ட பல வகையான பல்லி மற்றும் அரணை இனங்களும் (Lizards & Skinks), புள்ளித் தவளை, கூர்வாய் அழகுத் தவளை, பளிங்குத் தவளை மற்றும் பாறை தேரை (ஓரிடவாழ்வி) உள்ளிட்டவையும் இங்கு வாழ்கின்றன.

மேலும், அலங்கு / எறும்புத்தின்னி (Indian Pangolin), முள்ளெலிகள் (Hedgehogs), தேவாங்கு (Slender Loris), புனுகுப்பூனை (Civet Cat), ஆசிய புனுகுப்பூனை / மாநாய் (Asian Palm Civet Cat) உள்ளிட்டவையும் இத்திட்ட அமைவிடத்தில் காணப்படுகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலை

பொதுவாகக் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் பாறை சுண்டாங்கோழி, செவ்வாயன், பழுப்புத்தலை பாம்புக்கழுகு, பாறைக் கழுகு, பொரிப்புள்ளி ஆந்தை, வேட்டைக்கார ஆந்தை, கொம்பன் ஆந்தை, மஞ்சள்தொண்டை சின்னான் ஆகிய பறவைகளோடு கூம்பலகன் / கூம்பலகுச்சில்லை / ரோசாக்குருவி (Common Rosefinch). கொடிக்கால் வாலாட்டி அல்லது வன வாலாட்டி (Forest Wagtail) உள்ளிட்ட வலசைப் பறவைகளும் (Migratory Birds) இங்கு வந்து போகின்றன.

இதனுடன், மிக நெருக்கமான ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளின் சுற்றுச்சூழல் வழித்தடம் வழியாக ஆசிய நீலச்சிட்டு (Asian Fairy-bluebird), மலபார் சீகாரப் பூங்குருவி (Malabar Whistling Thrush), கண்கவர் நீண்ட வால் கொண்ட இந்திய அரசவால் ஈபிடிப்பான் அல்லது வேதிவால் குருவி (Indian Paradise Flycatcher), மாகதப் புறா (Emerald Dove) மற்றும் இந்திய தோட்டக்கள்ளன் (Indian Pitta) ஆகிய முக்கியப் பறவையினங்களும் இந்த வனப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.

இப்பகுதியின் அடர்ந்த கவிகை (Canopy) அமைப்பை நம்பி வாழும் இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் (Indian Giant Squirrel) மற்றும் கொண்டை பாம்புண்ணிக் கழுகு (Crested Serpent Eagle) போன்றவையும் இங்குப் பரவலாகப் பதிவாகியுள்ளன.

கரடிகளுக்கான சரணாலயம்

வேட்டைக்காரன் என்று சிறப்பாக அழைக்கப்படும் செந்நாய் (Dhole / Asiatic Wild Dog) மற்றும் காட்டுப் பன்றிகளும் (Wild Boars) காணப்படுகின்றன. திட்ட அமைவிடத்திலிருந்து 20 கி.மீ. தூரத்துக்கு அப்பால் 100க்கும் மேற்பட்ட கரடிகள், தேன் கரடி /சோம்பல் கரடிகள் (Sloth Bears) வாழ்கின்றன. இப்பகுதியை கரடிகளுக்கான சரணாலயமாக (Bear Sanctuary) அறிவிக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.

அதானி
அதானி

அனுமதி வழங்கக் கூடாது!

கௌதம் அதானி மீதான லஞ்ச ஊழல் புகார் இன்னும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊழலை ஒழிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழக அரசு, அதானியின் நிறுவனத்தோடு தமிழ்நாடு அரசு 07.01.2024, 25.11.2025 மேற்கொண்ட ஒப்பந்தங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம். மிகுந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதியில் இத்திட்டம் அமைவது கானுயிர்களுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். தமிழ்நாடு வனத்துறை இத்திட்டத்திற்கான வன அனுமதியை வழங்கக் கூடாதென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்திருக்கின்றனர்.

கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழ... மேலும் பார்க்க

கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல்... பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆற்றங்கரையை பசுமைவனமாக்கிய லூர்துராஜா!

ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்கின்ற இதே சமூகம்தான் அவற்றில் குப்பை, அழுக்குத் துணிகளை வீசி நீர்நிலைகளையும், ஆற்றின் கரைகளையும் நாசப்படுத்தி வருகிறது. எவற்றையும், எந்த வ... மேலும் பார்க்க

Birds: "இந்தப் பூமி வெறும் மனிதர்களுக்கானது மட்டுமல்ல..." - கண்ணாடிச் சுவர்களால் பலியாகும் பறவைகள்

மலைகளின் அரசியான நீலகிரி மலையில் இயற்கை எழிலைச் சிதைத்து கட்டப்பட்டு வரும் ஆடம்பர தங்கும் விடுதிகளால் ஏற்படும் சூழலியல் பாதுகாப்புகள் ஒருபுறம் என்றால் தங்கும் விடுதிக்குள் இருந்தவாறே இயற்கை எழிலைக் கண... மேலும் பார்க்க