செய்திகள் :

டங்ஸ்டன் சுரங்க ஏலம்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகளை பரப்புகிறார்கள்- அமைச்சர் துரைமுருகன்

post image

மதுரை அரிட்டாபட்டியில் சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக எதிர்க்கட்சிகள் பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு உரிமம் அளித்துள்ளது. இந்த கிராமங்களில் வாழக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதரம் இந்த சுரங்கப் பணிகளால் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பகுதி மக்கள் இதை எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து, இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்கள். இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பகுதி மக்களும் தமது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர்.

முதல்வரின் இந்த உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை சகிக்க முடியாத சிலர், மத்திய அரசின் இந்த சுரங்க உரிமத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக, விஷமத்தனமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். மேலும், இந்த உரிமத்தை வழங்குவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துக்களைப் பெற்றதாக ஒன்றிய அரசும் தவறான தகவலை தெரிவித்துள்ளது. இது குறித்த உண்மை நிலையை விளக்கிட விரும்புகின்றேன்.

இதையும் படிக்க | புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும்: பிரதீப் ஜான்

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்த உடனேயே, 3.10.2023 ஆம் தேதி மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன். ஆனால், 2.11.2023 ஆம் தேதி மத்திய சுரங்கத்துறை அமைச்சர் இதற்கு அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இந்த ஏலம் விடப்படுவதாகவும், தேசிய அளவிலான தேவைகளை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இந்த கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு நமது எதிர்ப்புகளை நிராகரித்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மேலூர் பகுதியில் உள்ள நிலங்களைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்கப்பட்ட போதும், உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதியானது ஒரு பல்லுயிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்டிக்காட்டினோம். இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாத மத்திய அரசு ஏலம் விட்டு டங்ஸ்டன் உரிமத்தை மேற்கூறிய நிறுவனத்திற்கு அளித்தது.

இன்று மக்களுடைய எதிர்ப்பையும் முதல்வர் ஸ்டாலின் உறுதியான நிலைப்பாட்டினையும் கண்டு மிரண்டு, மத்திய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடக்கூடிய எதிர்க்கட்சிகளும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை என துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர்

தமிழ்மொழித் தலைவர் திருநாவுக்கரசர் - பழ. நெடுமாறன்; பக். 116; ரூ. 150; பாளை சைவ சபை, 48, பெருமாள் தெற்குத் தேர்த் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002.பெரும்பாலும் அரசியல் தலைவராக மட்டுமே அறியப... மேலும் பார்க்க

பேபி ஜான் டிரைலர்!

தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக் செய்து வெளியிடுகிறார்.பேபி ஜான் எனப் பெ... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 12-வது சுற்றில் குகேஷ் தோல்வி!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 12வது சுற்றில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி தோல்வியுற்றார்.12 சுற்றுகள் முடிவில் டிங் லீரன் மற்றும் குகேஷ் இருவரும் 6-6 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளனர். மேலும் பார்க்க

மாணவரை மிரட்டி அதிகப்பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்!

கர்நாடகா: பெங்களூரில் செயலியில் காட்டியதை விட அதிகப்பணம் கேட்டு 20 வயது மாணவரை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மிரட்டி தாக்க முற்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பயி... மேலும் பார்க்க

மன்னர் பரம்பரை மனநிலை: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை 6 மாத கா... மேலும் பார்க்க

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன் படத்தின் படப்பிடிப்பு!

லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்க... மேலும் பார்க்க