செய்திகள் :

டெல்லி: `உடலில் ரத்தத்தை தெளிப்பார்கள்'- பெண்ணை பாலியல் கொடுமை செய்து மதமாற்ற செய்ய முயன்ற கும்பல்

post image

டெல்லியில் பாட்லா என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் சாஹில் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர், தான் ஒரு பணக்கார இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த நபரின் பெயர் பாஹீம் என்று பின்னர் அப்பெண் தெரிந்து கொண்டார். கடந்த 2022ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள சாஹில் வீட்டிற்கு அப்பெண் சென்றார். அங்கு சாஹிலும் அவரது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அதோடு அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டினர். அப்பெண்ணை மீரட்டிற்கு அழைத்து சென்று அங்கும் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இதையடுத்து அப்பெண் இது குறித்து டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து சாஹில் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அப்பெண் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ``என்னை பயமுறுத்த என் உடம்பு முழுக்க ரத்தத்தால் நனைப்பார்கள். அதோடு என் மீது விலங்குகளின் இறைச்சியை போட்டு என்னை பயமுறுத்துவார்கள். என்னை தஸ்லீம் என்பவரும் சித்ரவதை செய்தார். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றனர். அவர்கள் ஆயுத வியாபாரம் செய்வதும் எனக்கு தெரிய வந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

குருகிராம் போலீஸார்தான் அவர்களை கைது செய்துள்ளனர். அப்பெண்ணை மிரட்டுவதற்காக எடுக்கப்பட்ட வீடியோ இருந்த மொபைல் போன்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். சிறையில் இருந்து கொண்டு சாஹில் தன்னை தொடர்பு கொண்டு மிரட்டினான் என்றும், துபாய் நம்பரில் இருந்து ஒரு மிரட்டல் அழைப்பு வந்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். அது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; ஒரே இரவில் கைதான 133 ரௌடிகள் - எஸ்கேப்பான ஏ பிளஸ்... தொடரும் நடவடிக்கை!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்ட போலீஸார், 4 மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று ஒரே நாளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் சரித்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: அடிக்கடி சண்டை; மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்ற கணவன்!

ராணிப்பேட்டை காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி (45). பெயின்ட்டர் தொழிலாளி. இவரின் மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 10-ம் வகுப்புத் தேர்வில் தோல்வி; விபரீத முடிவெடுத்த மாணவி!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகேயுள்ள வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகோபால். இவரின் மனைவி சசிகலா. இவர்கள் காய்கறி சில்லறை வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் குறைந்த வருவாயில் குடும்ப... மேலும் பார்க்க

நெல்லை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீஸாரை அதிரவைத்த சிறுவர்கள்! - என்ன நடந்தது?

ஏ.ஐ தொழில்நுட்பத்திடம் பெட்ரோல் குண்டு செய்வது எப்படி என்பதை சிறுவர்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர், பழிவாங்கும் நடவடிக்கையாக காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசி எறிந்துவிட்டு தப்பிச... மேலும் பார்க்க

பஞ்சாப்: திருமணத்திற்கு மறுத்த பாடகி; கால்வாயில் சடலமாக மீட்பு; வாலிபர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

பஞ்சாப்பில் ஆயுத கலாசாரத்திற்குக் குறைவில்லாமல் இருக்கிறது. அடிக்கடி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யும் சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. தற்போது பஞ்சாப்பில் பெண் பாடகி ஒருவர் துப்பாக்கி முனையில்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!

தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ப... மேலும் பார்க்க