செய்திகள் :

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

post image

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸார் ரெய்டு நடத்தி துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ‘‘கடந்த மாதம் ஸ்ரீநகரில் ஜெய்ஷ் இ மொகமதின் போஸ்டர்கள் தென்பட்டன. அந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதனை ஒட்டியது டாக்டர் அடில் அகமது என்று தெரியவந்தது.

அவர் அனந்த்நாக் மருத்துவ கல்லூரியில் கடந்த ஆண்டு வரை வேலை செய்திருந்தார். அவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது
கைது

அவர் அனந்த்நாக் கல்லூரியில் பணியாற்றியபோது பயன்படுத்திய லாக்கரை திறந்தபோது அதில் துப்பாக்கி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கொடுத்த தகவலின் பேரில்தான் பரிதாபாத்தில் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

டாக்டர் அடில் அகமது, படித்த இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளுக்கு சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு அவரிடம் விசாரணை நடத்தி புல்வாமாவை சேர்ந்த டாக்டர் முஜாமில் சகீல் என்பவரும் கைது செய்யப்பட்டார்,’’ என்று தெரிவித்தனர்.

டெல்லி அருகில் 350 கிலோ வெடிமருந்துகளை எந்த தேவைக்காக பதுக்கி வைத்திருந்தனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத்தில் தீவிரவாதிகள் கைது

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த ஐதராபாத் டாக்டர் உட்பட 3 பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

அகமத் மொஹையுதின் சயீத் என்ற ஐதராபாத் டாக்டரிடமிருந்து 3 துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். குஜராத் தீவிரவாத தடுப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சயீத் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மொபைல் போனை ஆய்வு செய்து உத்தரபிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த தையல்காரர் ஆசாத் சுலேமான் ஷேக் (20) மற்றும் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியைச் சேர்ந்த மாணவர் முகமது சுஹைல் முகமது சலீம் கான் (23) ஆகிய இருவரையும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

தீவிரவாத தடுப்பு படையால் கைதானவர்கள்
தீவிரவாத தடுப்பு படையால் கைதானவர்கள்

சயீத் ஆப்கான் தீவிரவாத அமைப்பு ஒன்றுடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. மூவரும் லக்னோ, டெல்லி, அகமதாபாத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்துள்ளனர்.

அவர்கள் தங்களுக்கு தேவையான ஆயுதங்களை பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

திருச்சி: ``முதல்வர் தங்கியிருந்த இடத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் நடந்த படுகொலை'' - அண்ணாமலை

திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்த தாமரைச் செல்வன், இன்று காலை இருசக்கர வா... மேலும் பார்க்க

திருச்சி: அரிவாளோடு துரத்திய கும்பல்; தப்பிக்க காவலர் குடியிருப்பில் புகுந்த இளைஞர் வெட்டி படுகொலை

திருச்சி மாநகரம், பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(25). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பீமநகர் அருகே உள்ள மார்சிங்பேடை பகுதியில் இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானம் பேச அழைத்து மீண்டும் வன்கொடுமை செய்த வழக்கறிஞர்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை வழக்கறிஞர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா அரு... மேலும் பார்க்க

காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று காலையில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திலும் மொத்தம் 8 ... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க