செய்திகள் :

'தண்ணீர் பாட்டிலா... டம்ளரா... எதை தூக்கி வீசலாம்?' - மாறி மாறி கலாய்த்த பிரேமலதா - ஓ.பி.எஸ்!

post image

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

ஆளுநர் உரையின் மீது பேச எழுந்த பிரேமலதா முதலில், 'உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்றார். தொடர்ந்து பேசியவர், 'அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் வைப்பதால் மீண்டும் மீண்டும் தண்ணீரை நிரப்ப அவை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். நமக்கே சங்கடமாக இருக்கிறது. அதனால் அவை உறுப்பினர்களுக்கு இடத்தில் தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்'

உடனடியாக எழுந்த திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ், 'கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை தூக்கி அடித்து விடுவார்கள்' என்றார். அவையில் சிரிப்பலை எழவே, 'வன்முறையாக தூக்கி அடிப்பதாக இருந்தால் டம்ளரை கூட தூக்கி அடிக்கலாம் (நகைச்சுவையாக...)' என பிரேமலதா கூறினார். குறுக்கிட்ட பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, 'இது ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த வாழ்க்கை அனுபவமா என்று அறிய விரும்புகிறேன்' என்று கமென்ட் அடித்தார்.

ஓ.பி.எஸ் - ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பி.எஸ் - ஓ.பன்னீர்செல்வம்

இந்த உரையாடல் முதல்வர் உட்பட அவையில் உள்ள அத்தனை உறுப்பினர்களையும் கலகலப்பூட்டியது.

"ஆட்டமும் பாட்டமும் போதும்; ஆட்சியில் கவனம் செலுத்துங்க" - தவெக அரசுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டுமே பொதுப் போக்கு... மேலும் பார்க்க

``என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ``தமிழ்நாடு அரசின் அசுர வளர்ச்சியைப... மேலும் பார்க்க

MLA-க்கள் கைகொடுப்பார்களா? விசுவாசத்தை விற்றுவிட்டதாக அதிருப்தி MP-க்கள் மீது ஆதித்ய தாக்கரே சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்கள் 6 பேர் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர முடிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மாலை முறைப்படி ஏக்நாத் ஷிண்டே... மேலும் பார்க்க

மேகதாது அணை: `புதிய நடுவர் மன்றத்தை தமிழ்நாடு அரசு நாடுவதே ஏன்?' - தங்கம் தென்னரசு விளக்கம்

மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்தத் தீ... மேலும் பார்க்க

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க