செய்திகள் :

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!

post image

தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்
சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு திரைப்பட விருதுகளும்,
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறந்த தொடர்கள்,
கதாநாயகன், கதாநாயகி, ஆண்டின் சிறந்த சாதனையாளர்,
ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்டோருக்கு
சின்னத்திரை விருதுகளும் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு, 2016–2022 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014–2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அறிவித்திருக்கிறது.

வரும் 13.02.2026 அன்று அறிவிக்கப்பட்ட விருதுகளை, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கவிருக்கிறார்.

விருதுகள் அறிவிப்பு... சுருக்கமாக இங்கே!

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

2016 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள்

  1. சிறந்த படம் – முதல் பரிசு : மாநகரம்

  2. சிறந்த படம் – இரண்டாம் பரிசு : புரியாத புதிர்

  3. சிறந்த படம் – மூன்றாம் பரிசு : மாவீரன் கிட்டு

  4. சிறந்த படம் (சிறப்பு) : மனுசங்கடா

  5. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் : அருவி

  6. சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி (புரியாத புதிர்)

  7. சிறந்த நடிகை : கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை)

  8. சிறந்த இயக்குநர் : லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)

லோகேஷ் கனகராஜ்

2017 – 2022 திரைப்பட விருதுகள்

2017 :
சிறந்த படம் – அறம்
சிறந்த நடிகர் – கார்த்தி
சிறந்த நடிகை – நயன்தாரா

2018 :
சிறந்த படம் – பரியேறும் பெருமாள்
சிறந்த நடிகர் – தனுஷ்
சிறந்த நடிகை – ஜோதிகா

பரியேறும் பெருமாள்

2019 :
சிறந்த படம் – அசுரன்
சிறந்த நடிகர் – ஆர். பார்த்திபன்
சிறந்த நடிகை – மஞ்சு வாரியர்

2020 :
சிறந்த படம் – கூழாங்கல்
சிறந்த நடிகர் – சூர்யா
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி

தனுஷ், வெற்றிமாறன் அசுரன் படப்பிடிப்பில்
தனுஷ், வெற்றிமாறன் அசுரன் படப்பிடிப்பில்

2021 :
சிறந்த படம் – ஜெய் பீம்
சிறந்த நடிகர் – ஆர்யா
சிறந்த நடிகை – லிஜோ மால் ஜோஸ்

2022 :
சிறந்த படம் – கார்கி
சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு
சிறந்த நடிகை – சாய் பல்லவி

ஜெய் பீம்

சின்னத்திரை விருதுகள் (2014 – 2022)

2014

சிறந்த தொடர் – அழகி
சிறந்த நடிகர் – எம். ராஜ்குமார்
சிறந்த நடிகை – ஆர். ராதிகா சரத்குமார்

ராதிகா
ராதிகா

2015

சிறந்த தொடர் – ரோமாபுரி பாண்டியன்
சிறந்த நடிகர் – ஆர். பாண்டியராஜன்
சிறந்த நடிகை – சானியா போஜன்

நீலிமா ராணி
நீலிமா ராணி

2016

சிறந்த தொடர் – ராமானுஜர்
சிறந்த நடிகர் – கௌசிக்
சிறந்த நடிகை – நீலிமா ராணி

2017

சிறந்த தொடர் – நந்தினி

2018

சிறந்த தொடர் – பூவே பூச்சூடவா

2019

சிறந்த தொடர் – செம்பருத்தி

மேலதிக விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள PDF-ஐ ஓபன் செய்து பார்க்கவும்!

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமியின் D55ல் இணையும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார் - நடிகர்கள் யார் யார்?

`தனுஷ் தனது மகன் யாத்ராவை ஹீரோவாக அறிமுகம் செய்யவிருக்கிறார். அவரே டைரக்ட் செய்யப் போகிறார். இதற்காகத்தான் திருப்பதி சென்று வந்திருக்கிறார்' என்று சமூக வலைதளங்களில் தகவல் ஓடுகிறது. தவிர இன்று மாலை தனு... மேலும் பார்க்க

Gandhi Talks: "ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!"- விஜய் சேதுபதி

விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இந்​தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​... மேலும் பார்க்க

ஹாட்ஸ்பாட் 2: "அப்படி படம் எடுக்க எனக்கு உரிமை இருக்கு" - விமர்சனம் குறித்து விக்னேஷ் கார்த்திக்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், அஸ்வின், ஆதித்யா பாஸ்கர், வாணி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஹாட்ஸ்பாட் 2’. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியான இந்தப்... மேலும் பார்க்க

"எனக்கு பிரதீப் ரங்கநாதனின் மேனரிஸமா?" - விமர்சனத்துக்குப் பதில் அளித்த அபிஷன் ஜீவிந்த்

'டூரிஸ்ட் பேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் 'வித் லவ்'.இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார்.இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் ... மேலும் பார்க்க