செய்திகள் :

”தம்பி விஜய், கடைசி வரையில் ஆடிக்கொண்டுதான் இருக்கணும்!”- நயினார் நாகேந்திரன்

post image

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பட்ஜெட்டை படித்து பார்க்காமல் பட்ஜெட் உள்ளே என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து பார்க்காமல் அவர்கள் ஒண்ணுமே இல்லை ஒண்ணுமே இல்லை என்று சொல்லி வருகிறார்கள். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒன்றுமே இல்லாமல்தான் இருப்பார்கள், ஒண்ணுமே இல்லாமல் போய்விடுவார்கள்.  இந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன்

இதுகூடத் தெரியாமல் நம்முடைய முதலமைச்சர் ஒண்ணுமே தரவில்லை ஒண்ணுமே தரவில்லை என்று கூறினால் பத்திரிக்கையாளர்கள்தான் அவரை கேட்க வேண்டும்.  ஐந்து ஆண்டுகால ஆட்சியில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  எத்தனை ரயில்களை கொண்டு வரப்பட்டது? இன்றைக்கு சென்னையில் இருந்து அதிவேக விரைவு ரயில் பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் கூறியுள்ளனர் இதை உங்களைக் கேட்டால் கூறினார்கள்... நீங்கள் கேட்காமலே கொடுத்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை படித்துப் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.

தம்பி விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். அக்கட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படி நடமாடிக் கொண்டிருந்தால் கடைசி வரையில் நடனமாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

இந்த ஐந்தாண்டு காலம் ஸ்டாலின்தான முதல்வர். சட்டம் ஒழுங்கை தமிழக முதல்வர்தான் கையில் வைத்துள்ளார்.

நயினார் நாகேந்திரன்

ஆனால், கஞ்சா விற்பனை கிராமந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. பெண்களுக்கு எதிரான 50 சதவீதம் பெண்கள் பாலியல் குற்றங்கள் நடக்கின்றன. சாத்தான்குளத்தில் நடந்த லாக்கப்  மரணத்திற்கு எல்லா கட்சிகளும் ஐயோ என்று குதித்தார்கள்.  இன்றைக்கு கடந்த 5 ஆண்டுகளில் 32 மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்” என்றார்.  

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்... மேலும் பார்க்க

`தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைவது பற்றி பேச பட்னாவிஸுக்கு என்ன உரிமை இருக்கிறது?'- சரத் பவார் கேள்வி

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 28-ம் தேதி மாநில துணை முதல்வர் அஜித் பவார் திடீரென விமான விபத்தில் காலமானார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் அவசர அவசரமாக துணை முதல்வர் பதவியை ஏ... மேலும் பார்க்க

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க

``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி

சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார... மேலும் பார்க்க

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க