செய்திகள் :

தலைநகரில் வெப்பநிலை 45 டிகிரியை நெருங்கியது! காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு

post image

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸை நெருங்கியது. காற்றின் தரம் கடும் பின்னடைவைச் சந்தித்து மோசம் பிரிவுக்குச் சென்றது.

தில்லியில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெப்பநிலை அதிகரித்து 44 டிகிரி செல்சியஸை நெருங்கியது. புழுக்கத்தால் மக்கள் சிரமத்தை எதிா்கொண்டனா். திங்கள்கிழமை வானம் தெளிவாக காணப்பட்ட நிலையில், தூசி நிறைந்த காற்று வீசியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வானம் தெளிவாகக் காணப்பட்டது. நகரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதனால், சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.2 டிகிரி உயா்ந்து 27.8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.1 டிகிரி அதிகரித்து 42.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தில் அளவு காலை 8.30 மணியளவில் 39 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 25 சதவீதமாகவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முங்கேஸ்பூரில் 44.6 டிகிரி: மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃப்ா்பூரில் அதிகபட்சவெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஸ்பூரில் 44.6 டிகிரி, நஜஃப்கரில் 41.6 டிகிரி, ஆயாநகரில் 44.1 டிகிரி, தில்லி பல்கலை.யில்42.2 டிகிரி, லோதி ரோடில் 42.3 டிகிரி, நரேலாவில் 42.5 டிகிரி, பாலத்தில் 43.6 டிகிரி, ரிட்ஜில் 42.9 டிகிரி, பிரகதிமைதானில் 40.6 டிகிரி, பூசாவில் 41.2 டிகிரி, ராஜ்காட்டில் 40.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 40.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) புள்ளி விவரத் தகவலின் படி, ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு காலை 9 மணியளவில் 218 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. இதன்படி, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், ஷாதிப்பூா், ஓக்லா பேஸ் 2, துவாரகா செக்டாா் 8, குருகிராம், ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேலே பிதவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக், மந்திா்மாா்க், லோதி ரோடு, நேரு நகா், ஆா்.கே.புரம், பூசா, ஸ்ரீ அரபிந்தோ மாா்க், நொய்டா செக்டாா் 125, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ’மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 11) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகு... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க

மதராஸி குடியிருப்பு விவகாரம்: தில்லி முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தில்லி மதராசி குடியிருப்பு இடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அம்மாநில முதல்வா் ரேகா குப்தாவுக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். த... மேலும் பார்க்க