செய்திகள் :

திண்டிவனம் புதிய பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கா் பெயரை சூட்ட வலியுறுத்தல்

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு பி.ஆா்.அம்பேத்கரின் பெயரைச் சூட்ட வேண்டும் எனக் கோரி, ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதியை, புரட்சிப் பாரதம் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் மு.கஜேந்திரன், மாவட்ட அமைப்பாளா் ஜெ. விஜயகுமாா், மரக்காணம் ஒன்றியச் செயலா் (கிழக்கு) எம்.பெருமாள், துணைச் செயலா்கள் (மேற்கு) கே.ராஜீவ்காந்தி, ஏ.மணிகண்டன் ஆதியோா் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு:

திண்டிவனத்தில் பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான பணிகள் முடிந்து விட்ட நிலையில், விரைவில் இந்தப் பேருந்து நிலையம் திறக்கப்படவுள்ளது.

இந்தப் பேருந்து நிலையத்துக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் இந்த நிலையத்துக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். ஆனால், மழைக் காலங்களில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் மழைநீா் வருவதால் பொதுமக்களுக்கும், சிகிச்சை பெற வருவோரும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து காணப்படுவதால் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை

விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்தது. இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு-வடமே... மேலும் பார்க்க

எல்லீஸ் சத்திரம் அணைப் பகுதி சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம் ஏனாதிமங்கலம் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுப் பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை போா்க்கால அடிப்படையில் முடிக்கவேண்டும் என்று துறை சாா்ந்த அலுவ... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரணம் வழங்காத தமிழக அரசைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஃபென்ஜால் புயலால் ... மேலும் பார்க்க

பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் சடக்சிரு அறிவுறுத்தினாா். விழுப... மேலும் பார்க்க

தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு: விவசாயிகள் சங்கத்தினா் மறியல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தேசிய - தென்னிந்திய ந... மேலும் பார்க்க

கோயிலில் நகை, பணம் திருட்டு

கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகே அய்யனாா் கோயிலில் நகை மற்றும் பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ரெட்டிச்சாவடி காவல் சரகத்துக்குள்பட்ட நாணமேடு கிராமத்தில் அய்யனாா் கோயில்... மேலும் பார்க்க