செய்திகள் :

திமுக: `கட்சிக்காகதான் பொறுமையா இருந்தேன்’ - நகராட்சி துணை தலைவர் மீது சாதிய வன்கொடுமை புகார்

post image

நீலகிரி மாவட்டத்தின்‌ பேரூராட்சிகளில் ஒன்றாக இருந்த‌ கோத்தகிரி பேரூராட்சி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட கோத்தகிரி நகராட்சியின் தலைவராக தி.மு.க- வைச் சேர்ந்த ஜெயகுமாரி என்பவர் பதவி வகித்து வருகிறார். துணை தலைவராக படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த உமாநாத் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் ஜெயகுமாரி

பட்டியல் சமுதாய பெண்ணான‌ தலைவர் ஜெயகுமாரியை துணை தலைவர் உமாநாத் பொது வெளிகளில் சாதி பெயரைச் சொல்லி இழிவாகவும் ஆபாசமான வார்த்தைகளிலும் அவ்வப்போது பேசி வந்ததாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், கோத்தகிரியில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் தலைவர் ஜெயகுமாரியை சாதி பெயரைச் சொல்லி ஆபாசமாக இழிவுபடுத்தியிருக்கிறார் உமாநாத்.‌

இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜெயகுமாரி கோத்தகிரி காவல்நிலையத்தில் நேற்று மாலையே புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உமாநாத் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள உமாநாத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர் ‌.

பாதிக்கப்பட்ட பெண் ஜெயகுமாரி

பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண் ஜெயகுமாரி, "பட்டியல் சமுதாயத்தைச்‌ சேர்ந்த நான் தலைவராக பதவியேற்றதே இவருக்கு பிடிக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அவர் தொடர்ந்து என்னை சாதியின் பெயரைச் சொல்லி இழிவு படுத்துவது, பெண் என்றும் பார்க்காமல் மிகவும் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவது என மிகவும் மோசமாக நடந்து வந்தார். ஒரே கட்சியைச் சேர்ந்தவர் என்ற மரியாதைக்காக இத்தனை நாளாக பொறுத்து வந்தேன். மிகவும் எல்லை மீறிய பேச்சால் தற்போது புகார் கொடுத்து வழக்குப்பதிவு செய்யச் சொன்னேன் " என்றார்.

சங்கரன்கோவில்: மாற்றுத்திறனாளி விவசாயி படுகொலை; மனைவி படுகாயம் - நிலத்தகராறு காரணமா?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், மாற்றுத்திறனாளி விவசாயி. இவரின் மனைவி சுப்புத்தாய். நேற்று இரவு இவ்விருவரும் கரிவளம் பகுதியில் ... மேலும் பார்க்க

சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளை வழக்கில் உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர் சுதீஸ... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ... மேலும் பார்க்க

ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக பாலமுர... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.குடு... மேலும் பார்க்க

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேட... மேலும் பார்க்க