செய்திகள் :

திருச்சி தீரன்நகர்: குவியும் குப்பை... பாழாகும் கோரையாறு - சுகாதார சீர்கேட்டுக்கு தீர்வு காணப்படுமா?

post image

திருச்சி தீரன்நகர் பகுதியில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதியை முக்கிய சாலையுடன் இணைக்கும் பாலம், அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்துக்கும், அருகிலுள்ள தமிழ்நாடு அரசு பஸ் டிப்போ போக்குவரத்துக்கும் முக்கியமாகப் பயன்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் கீழ் கோரையாறு ஓடுகிறது.

தற்போது பாலத்தின் கீழ் நீர்வரத்து இல்லாததால், காலியாக உள்ள பகுதியை சிலர் குப்பைகள் கொட்டும் இடமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. மேலும், மழைக்காலங்களில் இந்தக் குப்பைகள் கோரையாற்றில் கலந்து சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதோடு, அப்பகுதியில் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததும், வீடுகளில் இருந்து குப்பைகளை தினசரி சேகரிக்கும் நடைமுறை இல்லாததும் இந்த நிலைக்கு ஒரு காரணமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே நேரத்தில், அப்பகுதியில் போதுமான குப்பைத்தொட்டிகளை அமைத்து, அனைத்து வீடுகளிலிருந்தும் தினசரி குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தீரன்நகர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் அதிகளவில் அரிதான நீர் வாத்துகள் | Photo Album

கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வாத்துகள்கழுவேலியில் நீர் வ... மேலும் பார்க்க

ஜவ்வாது மலை: அதானி மின் திட்டம்; ஒன்றிய அரசு அனுமதி! - பாதிப்புகளை பட்டியலிடும் பூவுலகின் நண்பர்கள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம்,... மேலும் பார்க்க

கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள்; அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த ஒருவாரமாக லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள் வீடுகளை நோக்கி படையெடுத்து வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டுப்பன்றி கூட்டம்; வனத்துறை போராடி மீட்டது எப்படி?

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்று வட்டாரக் கிராமப் பகுதிகளுக்குள் நுழ... மேலும் பார்க்க

கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல்... பரிதாபமாக உயிரிழந்த முதியவர்

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மதுக்கரை, போளுவாம்பட்டி, ஆனைகட்டி பகுதிகளில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ள கந்தே... மேலும் பார்க்க

தாமிரபரணி ஆற்றங்கரையை பசுமைவனமாக்கிய லூர்துராஜா!

ஆறு, குளங்கள் போன்ற நீர்நிலைகளை தெய்வமாகவும், தாயாகவும் பார்க்கின்ற இதே சமூகம்தான் அவற்றில் குப்பை, அழுக்குத் துணிகளை வீசி நீர்நிலைகளையும், ஆற்றின் கரைகளையும் நாசப்படுத்தி வருகிறது. எவற்றையும், எந்த வ... மேலும் பார்க்க