செய்திகள் :

திருவள்ளூர்: அண்ணியை கொலை செய்த கொழுந்தன் - மனைவியை அவதுறாக பேசியதால் ஆத்திரம்

post image

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த இருளஞ்சேரியை பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா (30). இவர் தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சாந்தி (26). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இளையராஜாவின் தம்பி இசைமேகம் (28). இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்றிரவு இசைமேகத்துக்கும் அவரின் அண்ணி சாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இசைமேகம், காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து அண்ணி சாந்தியை சரமாரியாக வெட்டினார். சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் இசைமேகம் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார்.

கைது
கைது

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சாந்தியை மீட்டவர்கள் பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு கொண்டு சென்றனர். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் சாந்தி, வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலைக் கேள்விபட்டதும் சாந்தியின் கணவர் இளையராஜா கதறி துடித்தார். ஆரம்ப சுகாதார மையத்திலிருந்து மப்பேடு காவல் நிலையத்துக்கு சாந்தி கொலை செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மப்பேடு போலீஸார், சாந்தியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த இசைமேகம், மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். ``

இதுகுறித்து மப்பேடு போலீஸார் கூறுகையில், ``அண்ணன் தம்பிகளான இளையராஜாவும் இசைமேகமும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். அதனால் இளையராஜாவின் மனைவி சாந்திக்கும் இசைமேகத்தின் மனைவிக்கும் இடையே வீட்டு வேலைகளை செய்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று இளையராஜா வீட்டில் இல்லை. மதுபோதையில் இசைமேகம் வீட்டிலிருந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் சாந்திக்கும் இசைமேகத்தின் மனைவிக்கும் இடையே வீட்டு வேலை செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது இசைமேகத்தின் மனைவியை சாந்தி அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதைக்கேட்டதும் போதையிலிருந்த இசைமேகம், மனைவிக்கு ஆதரவாக அண்ணி சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாடு அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இசைமேகத்தின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருக்கிறோம்" என்றனர்.

திருமணம் மீறிய உறவு; காதலன் துணையோடு கணவனை கொன்று, உடலை வெட்டி வீசிய மனைவி - சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள சந்தெளசி என்ற இடத்தில் பேக் ஒன்று சாலையோரம் கிடந்தது. அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் ஒருவரின் உடல் இருந்தது. அதில் கை, கால் மற்றும் தலை இல்லாமல் இ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹ... மேலும் பார்க்க

நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து கிரண் ரத்தோட் உட்பட 3 நண்பர்கள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அந்நேரம் பெண் ஒருவர் வந்து அந்த அறை கதவ... மேலும் பார்க்க

சூதாட்ட செயலி விளம்பரம்: யுவராஜ் சிங், உத்தப்பா, நடிகர் சோனுசூட்டின் ரூ.7.93 கோடி சொத்து பறிமுதல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டவிரோத சூதாட்ட செயலி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த மொபைல் செயலி மூலம் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதில் வரக்கூடிய வருமானத்திற்... மேலும் பார்க்க

கரூர்: '1000 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருட்டு' - குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் க... மேலும் பார்க்க

`உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்

கன்னியாகுமரி அருகே உள்ள மருங்கூரில் செயல்பட்டுவரும் தனியார் ரிசார்டில் தடைச் செய்யப்பட்ட உயர் ரக போதை விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக கன்னியாகுமரி எஸ்.பி டாக்டர் ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்... மேலும் பார்க்க