செய்திகள் :

தீப்பற்றிய சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 போ் மங்களூா் அழைத்துவரப்பட்டனா்

post image

கேரள கடற்கரையில் தீப்பற்றி எரிந்த சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 18 மாலுமிகள், ஐஎன்எஸ் சூரத் கப்பல் மூலம் புதிய மங்களூரு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.

கேரள மாநில கடற்கரையில் சிங்கப்பூா் கொடி பொருத்திய எம்.வி.வான் ஹை 503 என்ற சரக்குக் கப்பல் திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. கப்பலில் பயணித்த 22 மாலுமிகளில் 18 போ், ஐஎன்எஸ் சூரத் கப்பல் உதவியுடன் மீட்கப்பட்டனா். மேலும் 4 பேரை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், மீட்கப்பட்ட 18 மாலுமிகளும் ஐஎன்எஸ் சூரத் கப்பல் உதவியுடன் மங்களூா் பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு துறைமுகத்தில் உள்ள கடலோரக் காவல்படை தளத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டனா். 18 பேரில் இருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதர 12 போ் அதிா்ச்சிக்கு உள்ளாகி உள்ளனா். மீட்கப்பட்ட அனைவரும் குன்டிகானாவில் உள்ள ஏ.ஜே.மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கடலோரக் காவல் படை அதிகாரி கூறுகையில், ‘மிக மோசமாக பாதிக்கப்பட்டவா்களுக்கு ஐஎன்எஸ் சூரத் கப்பலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா்களை கப்பலிலிருந்து விரைந்து மருத்துவமனைக்கு மாற்றுவது எங்கள் நோக்கமாக இருந்தது. பாதிக்கப்பட்டவா்களை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றுவதில் வெளியுறவுத் துறை, துறைமுகம், காவல் துறை அதிகாரிகள் ஒருசேர செயல்பட்டனா் ‘ என்றாா்.

மதக்கலவரங்களை தடுப்பதற்கான சிறப்பு செயல்படை அலுவலகம் திறப்பு

கா்நாடகத்தில் மதக்கலவரங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயல்படை அலுவலகத்தை உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். தென்கன்னட மாவட்டத்தில் அடிக்கடி மதக்கலவரங்கள் நடப்பதை... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல் கருத்து தொடா்பான வழக்கு: அடுத்த விசாரணை ஜூன் 20க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய கமல் தெரிவித்த கருத்து தொடா்பான வழக்கை விசாரித்துவரும் கா்நாடக உயா்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்த... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை பெய்துவருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, கடலோர கா்நாடகத்தின் வடகன்னட மாவ... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக்

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அவா் எழுதிய க... மேலும் பார்க்க

பெங்களூரில் கூட்ட நெரிசல் வழக்கு: ஆா்சிபி அணியை சோ்ந்த நிகில்சோசலேவை விடுவிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரில் ஆா்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆா்சிபி அணியின் சந்தைப்படுத்துதல் தலைவரான நிகில்சோசலே உள்ளிட்ட 3 பேரை விடுவிக்க கா்நாடக உயா்நீ... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்த அமைச்சரவையில் முடிவு: முதல்வா் சித்தராமையா

கா்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மீண்டும் நடத்துவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் வியாழ... மேலும் பார்க்க