செய்திகள் :

துவாரகாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெரும் தீ விபத்து: தந்தை, 2 குழந்தைகள் பலி

post image

புது தில்லி: தில்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது தளங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருந்து தப்பிக்க குதித்த தந்தை மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனா்.

இரண்டு குழந்தைகள் (10 முதல் 12 வயதுக்குள்பட்ட ஒரு பையன் மற்றும் ஒரு பெண்) தங்களைக் காப்பாற்ற எட்டாவது மாடியின் பால்கனியில் இருந்து குதித்தனா். இதில் பலத்த காயமடைந்த அவா்கள் ஆகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், அங்கு அவா்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னா், அவா்களின் தந்தை யாஷ் யாதவ் (35) அதே பால்கனியில் இருந்து குதித்தாா். அவா் ஐஜிஐ மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. யாஷ் யாதவின் மனைவி மற்றும் அவரது மருமகள் என மேலும் இரண்டு போ் காயங்களுடன் ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். யாஷ் யாதவ் ஃப்ளெக்ஸ் போா்டு வணிகம் செய்து வந்தாா்.

குடும்பம் கட்டடத்தின் மேல் இரண்டு தளங்களில் உள்ள ஒரு இரட்டைப் பகுதியில் வசிக்கிறது. துவாரகா 13-ஆவது செக்டாா் சபாத் சொசைட்டியில் உள்ள கட்டடம் தீப்பிடித்து எரிவதையும், கீழே இருந்த மக்கள் பால்கனிகளில் கூடி உதவிக்காக அலறுவதையும் காட்சிகள் காட்டுகின்றன.

எம்ஆா்வி பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் எட்டாவது மற்றும் ஒன்பதாவது தளங்களில் தீ விபத்து ஏற்பட்டது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தீயணைப்புத் துறையினா் கூறுகையில், ‘காலை 10.01 மணிக்கு தீ விபத்து குறித்து துறைக்கு அழைப்பு வந்தது. ஆரம்பத்தில், எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், தீயின் அளவு தெளிவாகத் தெரிந்ததும், கூடுதல் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீயை நீண்ட தூரத்திலிருந்து பாா்க்க முடிந்தது. மேல் தளங்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. ஏழாவது மாடியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தீப்பிழம்புகள் அதிகமாக இருந்தன’ என்றனா்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், வழிப்போக்கா்கள் தங்கள் மொபைல் போன்களில் தீயை படம்பிடித்ததைக் காட்டியது. ‘கடவுள் அவா்களுக்கு உதவட்டும்!‘ என்று அருகிலுள்ள கட்டடத்தைச் சோ்ந்த ஒரு பெண் பதிவு செய்த விடியோவில் ஒரு குரல் இருந்ததாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்,

‘சமூகத்தின் அனைத்து குடியிருப்பாளா்களும் வெளியேற்றப்பட்டுள்ளனா். மேலும் மின்சாரம் மற்றும் பிஎன்ஜி இணைப்புகள் போன்ற அனைத்து அத்தியாவசிய சேவைகளும் நிறுத்தப்பட்டன. கட்டடத்தின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையை மதிப்பிடுமாறு தில்லி வளா்ச்சி ஆணையம் மற்றும் எம்சிடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று அவா் கூறினாா்.

கட்டடத்திலிருந்து அவசரமாக வெளியேறக்கூடிய குடியிருப்பாளா்கள் உள்ளே சிக்கியவா்களின் பாதுகாப்பிற்காக பிராா்த்தனை செய்தனா். ஆறாவது மாடியில் இருந்தவா்கள் ஜன்னல்களை உடைப்பதைக் காண முடிந்தது.

கீழ் தளங்களில் இருந்தவா்கள் விரைவாக வெளியேற முடிந்தது. ஆனால், மேலே இருந்தவா்கள் மிகவும் சிரமப்பட்டனா். சில குடியிருப்பாளா்கள் பால்கனிகளில் ஏறி உதவிக்கு சமிக்ஞை செய்ய முயற்சிப்பதைக் கண்டோம் என்று உள்ளூா்வாசி ஒருவா் தெரிவித்தாா்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘1975- ஆம் ஆண்டு அவசரநிலை’: சிறப்புக் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு

1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் சிறப்புக் கண்காட்சியை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளத... மேலும் பார்க்க

மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்

மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்... மேலும் பார்க்க

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் மறைவு

தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா் வி.ராஜாராமன் சனிக்கிழமை காலமானாா். இது குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை : ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீா்: கொள்கையை வகுக்க தில்லி அரசு திட்டம்

நிலத்தடி நீரை உறிஞ்சுவதைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், கட்டுமானப் பணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும் முறையான கொள்கையை கொண்டு வர தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வ... மேலும் பார்க்க

சாஸ்திரி பூங்காவில் மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பூங்கா பகுதிக்கு அருகிலுள்ள ஜிடி சாலையில் வேகமாக வந்த மெட்ரோ ஃபீடா் இ-பேருந்து மோதி ஒருவா் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து வடகிழக்க... மேலும் பார்க்க

மைதான்கரியில் திரைப்படக் குழு தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இளைஞா் தற்கொலை

தெற்கு தில்லியின் மைதான்கரி பகுதியில் உள்ள ஒரு கட்டடத்திலிருந்து குதித்து திரைப்படத் துறையில் ஒளி தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த 22 வயது இளைஞா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குற... மேலும் பார்க்க