செய்திகள் :

தேனிலவுக்கு குடும்பத்தையே அழைத்து வந்த கணவன்! - விவாகரத்து கேட்கும் மனைவி

post image

திருமணமானவுடன் கணவன் மனைவி தம்பதியாக தேனிலவு செல்வது வழக்கம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மிகவும் அபூர்வமாக இத்தேனிலவுக்கு குடும்பத்தினரும் சேர்ந்து செல்வது நடக்கும்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள ராம்ராஜ் என்ற பகுதியை சேர்ந்த சாதனாவிற்கு டெல்லியை சேர்ந்த விவேக் என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதி தேனிலவு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் நைனிடால் என்ற இடத்திற்கு தேனிலவு சென்றனர். கணவன் மனைவி இருவர் மட்டுமே தேனிலவு செல்கிறோம் என்று நினைத்த சாதனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விவேக்கின் ஒட்டுமொத்த குடும்பமும் தேனிலவுக்கு வந்தது.

அது ஒரு குடும்ப பயணமாக மாறியது. இதனால் தேனிலவில் அடிக்கடி கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேனிலவு முடிந்து வந்த பிறகும் இந்த பிரச்னைக்கு தீர்வுகாண முடியவில்லை. இந்த பிரச்னை முடியும் முன்பு அடுத்தகட்டமாக இரண்டாவதாக துபாயிக்கு தேனிலவு செய்ய விவேக் முடிவு செய்தார்.

ஆனால் இந்த பயணத்திலும் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களை அழைத்துச்செல்ல விவேக் முடிவு செய்தார். அதனை கேட்டு கொதித்துப்போன சாதனா தனது கணவரிடம் அவரது முடிவை எதிர்த்து கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதோடு இது அவர்களுக்குள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சாதனா இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் தம்பதியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து இருவரையும் குடும்ப கவுன்சிலிங் மையத்திற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இரண்டு பேரும் மூன்று முறை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். சாதனா கவுனிலிங் நடத்தியவர்களிடம் பேசுகையில்,''கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், பந்தத்தை உருவாக்குவதற்கும் தேனிலவு என்பது ஒரு சிறப்பான நேரமாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து சுற்றி இருந்ததால், தன் கணவருடன் தனியாக நேரத்தை செலவிட தனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை'' என்று தெரிவித்தார். இது கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட காரணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். விவேக் தனது செயலை நியாயப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கவுன்சிலிங் செய்தவர்களிடம் கூறுகையில், `எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேனிலவின் போது குடும்பத்தை அழைத்து சென்றேன்.

பயணத்தில் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களைச் அழைத்துச்சென்றதில் தவறு இருப்பதாக கருதவில்லை' என்று தெரிவித்துள்ளார். மணமகள் இத்தேனிலவை திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பை தவறவிட்டதாக பார்க்கிறார். ஆனால் மணமகன் தனது நோக்கங்கள் நல்லதாகவும், குடும்பம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இருவரது நோக்கமும் சரியாக இருந்தாலும், இருவரும் கலந்து ஆலோசித்து இம்முடிவை எடுத்திருந்தால் பிரச்னை வந்திருக்காது.

ஆனால் இப்போது கவுன்சிலிங்கில் அவர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை. நான்காவதாக மீண்டும் ஒரு முறை அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் இருவரும் தங்களது முடிவில் இருந்து இறங்கி வரவில்லை. இதனால் இப்போது அப்பெண் கோர்ட்டில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க