செய்திகள் :

'தோட்டா இல்லை' - விமான நிலையத்தில் டிரிக்கரை அழுத்திய சிவசேனா மாஜி கவுன்சிலர் - இருவர் காயம்

post image

மும்பையில் சிவசேனா கவுன்சிலராக இருந்தவர் கமலேஷ் ராய். இப்போது கம்லேஷ் ராய் மகன் கவுன்சிலராக இருக்கிறார். கமலேஷ் ராய் லக்னோவிற்கு சென்றுவிட்டு மும்பை திரும்புவதற்காக லக்னோ விமான நிலையம் வந்தார். அவர் தன்னிடம் ஒரு துப்பாக்கியும், 21 தோட்டாக்களும் இருப்பதாக முன்கூட்டியே குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அவரையும் துப்பாக்கியையும் தனியாக எடுத்துச்சென்று மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில் ஒரு தோட்டா அவர்கள் இருந்த கட்டிடத்தின் மேற்பரப்பை தாக்கி அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் ரோஹித் மற்றும் சுமன் ஆகிய இரண்டு பேரையும் தாக்கியது.

உடனே அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கி
துப்பாக்கி

இச்சம்பவத்தை தொடர்ந்து கமலேஷ் ராய் உடனே கைது செய்யப்பட்டார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் நீது கூறுகையில், "அந்தப் பயணி தனது மனைவியுடன் மும்பைக்குச் சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிய உரிமம் இருந்ததுடன், அதை நாடு முழுவதும் எடுத்துச் செல்லவும் அனுமதி இருந்தது. நாங்கள் சம்பவ இடத்தில் ஆய்வை நிறைவு செய்துவிட்டோம். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சுமன் இது குறித்து கூறுகையில்,''துப்பாக்கியில் தோட்டாக்கள் இல்லை என்பதைக் காட்டுவதற்காக ராய் துப்பாக்கியின் விசையை (trigger) அழுத்தினார். அந்தச் செயல்விளக்கத்தின்போது துப்பாக்கி வெடித்ததில், எனது தொடை உட்பட இரு கால்களிலும் குண்டு பாய்ந்தது''என்று கூறினார். மற்றொரு பாதுகாவலரான ரோஹித் இது குறித்து கூறுகையில்,'' பயணி துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மேகசினை (magazine) வெளியே எடுத்துச் சரிபார்த்தார். பின்னர் அவர் அதன் ட்ரிக்கரை (trigger) கீழ்நோக்கி அழுத்த, துப்பாக்கி வெடித்தது. இதனால் எனது இடது கையின் கடைசி விரலுக்கு அருகில் காயம் ஏற்பட்டதுடன், சற்று வீக்கமும் உள்ளது." என்றார். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிலீப்பர் டிக்கெட்டில் ஏ.சியில் பயணம்: தட்டிக்கேட்ட டி.சி, ரயில்வே பாதுகாவலரை பிளேடால் தாக்கிய நடிகை

மும்பையில் டிவி தொடர்கள், வெப்சீரியஸ்களில் நடித்து வருபவர் அந்தரா பானர்ஜி(31). மும்பை அருகில் உள்ள தானேயில் வசிக்கும் அந்தரா பானர்ஜி, பாந்த்ரா-கங்காநகர் ஆரவலி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெப் சீரிஸ் ஒன்றின் பட... மேலும் பார்க்க

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க