செய்திகள் :

நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!

post image

'' 'டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது' என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக்குழாய்க்கு வருகின்றன. இதையே 'அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு உணவுக் குழாயில் எரிச்சல், புண் மற்றும் குரலில் மாற்றம் ஏற்படுகிறது. மேலும் நுரையீரலில் இருந்து பல்லின் எனாமல் வரை பாதிக்கப்படுகிறது.

gut health
gut health

எப்போதாவது விருந்து சாப்பிடும்போதோ, அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்ளும்போதோ இதுபோன்ற பிரச்னை வந்தால் அதில் பாதிப்பு இருக்காது. ஆனால், வாரக்கணக்கில் இந்தப் பிரச்னை நீடித்தால் வருடத்தில் பல முறை இந்தப் பிரச்னை ஏற்பட்டால், கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். சுய மருத்துவத்தைத் தவிர்த்து, மருத்துவரை அணுகி, இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் டாக்டர் பாசுமணி.

சுயமாக மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிற டாக்டர் அதற்கான காரணத்தை விளக்கினார்.

''நம் உடல் 10 ஆயிரம் கோடி செல்களால் கட்டப்பட்டது என்றால், குடலில் மட்டும் 100 ஆயிரம் கோடி பாக்டீரியா உள்ளன. குடலுக்குள் ஒரு தோட்டமே இருக்கிறது. ஏன் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். நாம் உயிர்வாழ அந்த பாக்டீரியாவும் நம்மோடு சேர்ந்து வாழ்கிறது. நோய்த்தொற்று, ஃபுட் பாய்சன் போன்றவற்றின்போது இந்த பாக்டீரியா பாதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில், ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுக்கும்போது இந்த நன்மை செய்யும் பாக்டீரியாவும் சேர்ந்து பாதிக்கப்படும்.

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டும் இதுபோன்ற மருந்துகளை எடுக்கும்போது இந்த பாக்டீரியாவுக்குப் பாதிப்பு நேராமலும், அப்படியே ஏற்பட்டாலும் அது சிறிய அளவில் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளப்படும். இதனால், உணவுச் செரிமானத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். நீங்களாக மருந்து எடுத்தால், பாக்டீரியா அழிக்கப்படும். மீண்டும் அந்தத் தோட்டத்தைக் கட்டி எழுப்ப ஒரு வருடம்கூட ஆகலாம்'’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் பாசுமணி.

Doctor Vikatan: வாக்கிங் 10,000 அடிகள் நடந்தால்தான் பலன் கிடைக்குமா?

Doctor Vikatan: நான் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வாக்கிங் செல்கிறேன். கிலோமீட்டர் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனால், என் நண்பர்கள் பலரும், தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ், 12 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதாகச் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தலைவலியே இல்லாவிட்டாலும் தினமும் தைலம் தடவும் வழக்கம், பிரச்னை வருமா?

Doctor Vikatan: என் வயது 53. எனக்கு தினமும் தலைவலி தைலம் தடவிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வலி இருக்கிறதோ, இல்லையோ, அதைத் தடவிக்கொண்டுதூங்கினால்தான்திருப்தியாக உணர்வேன். இந்தப் பழக்கத்தினால்ஏதேனும் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: வயதுக்கேற்ற உயரம் இல்லாத டீன் ஏஜ் மகள்; 15-16 வயது பிறகு வளர்ச்சி நின்றுவிடுமா?

Doctor Vikatan: டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு அந்த வயதுக்கேற்ற உயரம் இல்லை. 15-16 வயதுக்குப் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... வயதுக்கேற்ற உயரத்தைப் பெற ஏதேனும் வழிகள்... மேலும் பார்க்க

உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? - மருத்துவர் கு. சிவராமன்

தினசரி உணவில், நாம் எத்தனைவிதமான நறுமணப் பொருட்களை, மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறோம் தெரியுமா? வாரா வாரம் சாம்பார் பொடி, ரசப் பொடி, புளிக்குழம்பு பொடி எனத் திரித்துவைக்கும் அம்மாக்கள் இன்றைக்கும் சிலர... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: 34 வயது நண்பனின் சார்பாக இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. வழக்கமாக பெரும்பாலான ஆண்களுக்கும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதுதா... மேலும் பார்க்க

Doctor Vikatan: கையேந்தி பவன் முதல் பெரிய ரெஸ்டாரன்ட் வரை, போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?

Doctor Vikatan: என்குழந்தைகள் இருவருக்கும் பனீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக பல கடைகளிலும் போலி பனீர் விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. போலி பனீரை எப்படித் தயாரிக்கிறார்கள்... அத... மேலும் பார்க்க