செய்திகள் :

பங்குச் சந்தை: 'அதிக லாபத்தைப் பெற எதில் முதலீடு செய்ய வேண்டும்?'- வழியைக் காட்டும் 'லாபம்' நிறுவனம்

post image

பொதுவாக, நல்ல லாபம் பார்க்கும் வழிகள் என்ன, எந்த முதலீட்டில் என்ன ரிஸ்க் இருக்கிறது, அந்த ரிஸ்க்கைத் தாண்டி என்ன லாபம் கிடைக்கும், எதில் எந்த அளவுக்கு முதலீடு செய்யலாம் போன்ற சில அடிப்படைக் கேள்விகளின்படி யோசித்தால், நல்ல முதலீட்டுத் திட்டத்தை நம்மால் தேர்வு செய்ய முடியும்.

ஆனால், முதலீடு என்று வரும்போது நம்மில் பலருக்கும் சரியான முடிவை எடுக்கத் தெரிவதில்லை. பிறர் சொல்லும் முதலீடுத் திட்டத்தை மிகச் சிறப்பானது என்று நம்பி பணத்தைப் போடுபவர்கள் பலர். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களாக இருந்தாலும் சரி, இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளராக இருந்தாலும் சரி, இதுதான் நடக்கிறது.

உதாரணமாக, பங்குச் சந்தையில் நேரடியாகப் பங்குகளை வாங்குவதில் அதிக லாபம் கிடைக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். உண்மைதான். ஆனால், தவறான பங்குகளை வாங்கினால், அதிக நஷ்டம் வரும். அந்த நஷ்டத்தைச் சரிசெய்வதற்கே பல ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

இன்னும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் 'டைரக்ட்' முறையில் தங்களுக்குப் பொருத்தம் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்துவிட்டு, குறைவான வருமானத்தையே பெறுகிறார்கள்.

யூலிப் பாலிசிகள் மூலம் மிகப் பெரிய லாபத்தை அடையலாம் என்று சிலர் சொன்னதை நம்பி, யூலிப் பாலிசி எடுத்துவிட்டு, 8% - 10% வருமானம் மட்டுமே பெற்றவர்கள் பலர். அந்தப் பாலிசியை எப்படி ஒழித்துக் கட்டுவது என்று தெரியாமல், பலரும் தவியாய்த் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிலர், நமக்கு வம்பே வேண்டாம் என்று நினைத்து, இருக்கிற பணம் அத்தனையையும் வங்கி பிக்சட் டெபாசிட்டில் போட்டு வைத்திருக்கிறார்கள். வங்கி பிக்சட் டெபாசிட்டில் நம் பணம் பத்திரமாக இருக்கும். ஆனால், பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் அதில் கிடைக்கவே கிடைக்காது.

ஆக, அதிக லாபத்தைப் பெற நீங்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும், குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நீங்கள் ஏன் முதலீடு செய்ய வேண்டும், இதில் உள்ள ரிஸ்க்குகள் என்ன, இந்த முதலீட்டில் உங்களுக்கு எந்த அளவுக்கு லாபம் கிடைக்கும், நீண்ட காலத்தில் உங்கள் முதலீட்டை எப்படி அமைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் அதிகளவிலான பணத்தைச் சேர்க்க முடியும் என்பது பற்றி எல்லாம் முதலீட்டாளர்களுக்குச் சரியாக எடுத்துச் சொல்லி, சரியான வழியைக் காட்டுவதற்குத் தயாராக இருக்கிறது 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம்.

 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம்
'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம்

இந்த வீடியோவைப் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த லிங்க்கினைக் கிளிக் செய்யுங்கள்... https://www.youtube.com/watch?v=kreaCTL9uMI

மியூச்சுவல் ஃபண்டில் பணம் போடுவதற்கு எனக்குப் பயமாக இருக்கிறது என்று சொல்கிறவர்களுக்கு அதைப் பற்றி சரியாக எடுத்துச் சொல்லி, அவர்களின் பயத்தைப் போக்கி, தெளிவான விளக்கத்தைத் தந்து, சரியான வழியைப் பெற வேண்டுமா?

ஆம் எனில், பின்வரும் இந்தக் காலண்டி லிங்க்கினை கிளிக் செய்து, உங்களுக்கான நேரத்தைக் குறிப்பிடுங்கள்... NRI Calendly - https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் 'லாபம்' டீம் உறுப்பினர்கள் உங்களுக்குப் போன் செய்து, உங்களுக்கான முதலீட்டு வழிகளைக் காட்டுவார்கள்.

நல்ல லாபம் பெற நிறைய அதிர்ஷ்டம் வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பணம் போய்விடுமோ என்கிற பயமும் தேவை இல்லை. தெளிவாக சிந்தித்து செயல்பட்டால், நல்ல லாபம் என்பது எல்லோருக்கும் சாத்தியமே என்பதை மறக்காதீர்கள்!

லாபம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள...

லாபம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பமா? இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://labham.money/events/webinar-apr18-2026?utm_source=labham_whatsapp&utm_medium=whatsapp_group&utm_campaign=webinar_apr18_2026

Labham Youtube Video: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

மாதம் ₹100000 2-வது வருமானம்! கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் NRI Financial Plan!

கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் என வளைகுடா நாடுகளில் வெயிலில் உழைத்து ஊதியம் சேர்க்கும் நண்பர்களே! ஒரு நிமிடம் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். 'இதே ஓட்டத்தை இன்னும் எத்தனை காலத்துக்கு ஓடப்போகிறோம்?' வர... மேலும் பார்க்க

'இன்று ₹15 லட்சம்; 8 ஆண்டில் ₹28 லட்சம்' - கல்லூரிக் கட்டணத்திற்குத் திட்டமிடுவது எப்படி?

40 வயதைக் கடந்த பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் இருக்கலாம். ஆனால், இரவு தூங்கும்போது மனதிற்குள் ஒரு சின்ன பயம் எட்டிப் பார்க்கும். அது பணமில்லாததால் வரும் பயம் அல்ல. குழந... மேலும் பார்க்க

எதிர்காலத்துக்குப் பணத்தை சேர்க்கப் போறீங்களா? - இந்த 5 விஷயங்களை அவசியம் கவனியுங்க பாஸ்.!

நம்முடைய எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்பாக இருக்கட்டும், குழந்தைகள் வளர்ந்து, அவர்களுக்குத் திருமணம... மேலும் பார்க்க

Single Parent: Retirment பிளானிற்கு எதில் முதலீடு செய்யலாம்?| பணம் வளர்ப்போம்

வாழ்க்கை முழுவதும் ஓடி நிம்மதியாக உட்காருவது 'ரிட்டயர்மென்ட்' காலத்தில் தான். பிற பெற்றோர்களை விட, சிங்கிள் பேரன்டுகள் சற்று அதிகமாகவே ஓடியிருப்பார்கள். அதனால், அவர்களுக்கு ரிட்டயர்மென்ட் கால ஓய்வு மி... மேலும் பார்க்க

Single Parent: அவங்க குழந்தைகளின் கல்விச் செலவை எப்படி பிளான் செய்ய வேண்டும்? | பணம் வளர்ப்போம்

இன்று ஒவ்வொரு பெற்றோர்களும் ஓடியாடி உழைப்பது - அவர்களது குழந்தையின் எதிர்காலத்திற்காக தான். அந்த எதிர்காலத்தை சிங்கிள் பேரன்டுகள் எப்படி சிறப்பாக கட்டமைக்கலாம் என்பதை கூறுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் ல... மேலும் பார்க்க

பங்குச் சந்தை இறக்கத்தில் SIP-யை நிறுத்துவது புத்திசாலித்தனமா? இதனால் லாபம் கிடைக்குமா?

காய்கறி சந்தை: தக்காளி விலை 1 கிலோ ரூ.50... நீங்கள் ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறீர்கள். 30 நாள்களுக்குப் பிறகு... தக்காளி விலை 1 கிலோ ரூ.25... 'சூப்பர்' என்று நினைத்து, நீங்கள் ஒரு கிலோ தக்காளிக்குப் ... மேலும் பார்க்க