செய்திகள் :

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

post image

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அன்றைய தினம் உலகம் முழுக்க இருக்கும் வள்ளலாரின் பக்தர்கள் வடலூருக்கு வந்து, ஏழு திரைகள் நீக்கிக் காட்டப்படும் ஜோதியை தரிசித்துச் செல்வார்கள். அன்றைய தினம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அங்கு அன்னதானம் வழங்கப்படும்.

அதற்காக கடந்த 25 ஆண்டுகளாக அரிசியையும் காய்கறியையும் வழங்கி வரும் கடலூர் காய்கறி வியாபாரி பக்கீரான், இந்த ஆண்டு 18,000 கிலோ காய்கறி மற்றும் 100 அரிசி மூட்டைகளை சத்தியஞான சபைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா

இதுகுறித்து பக்கீரானிடம் பேசியபோது, ``அது 2001-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். வள்ளலாரின் தீவிர பக்தரான என்னுடைய நண்பர் சிவபெருமாள், `நீங்க ரொம்ப கஷ்டப்படறீங்க. தைப்பூசத்திற்கு சத்தியஞான சபைக்கு 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுங்க.

கண்டிப்பாக நீங்க நல்லா இருப்பீங்க' என்று சொன்னார். உடனே 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்தேன். அவர் சொன்னதைப் போல நான் கஷ்டத்தில் இருந்து மீள்வதற்காக அல்ல. பசித்தவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதைத் தவிர வேறு கொடுப்பினை என்ன இருக்க முடியும் ?

அதற்காக அந்த அரிய வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். அடுத்த ஆண்டு 10 மூட்டை, அதற்கடுத்த ஆண்டு 25 மூட்டை, அதற்கடுத்த ஆண்டு 50 மூட்டைகள் என எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வந்தேன்.

`வள்ளலார் மூட்டிய நெருப்பு மதங்களைக் கடந்து எரியும்..!’

ஆரம்பத்தில் நண்பர் சிவபெருமாள் சொன்னதைப் போல கஷ்டத்தில் இருந்து மீண்டும் விட்டேன். அப்போது சபையில் இருந்து, `நீங்க என்ன வியாபாரம் பண்றீங்க ?' என்று என்னைக் கேட்டபோது, நான் காய்கறி வியாபாரம் செய்வதாகச் சொன்னேன்.

அதற்கு, `ஐந்து வருஷத்துக்கு தேவையான அரிசி எங்ககிட்ட இருக்குது. அதனால நீங்க காய்கறியை கொடுங்க. மகிழ்ச்சியா ஏத்துக்குவோம்' என்று கேட்டனர். அதையடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக காய்கறிகளை அனுப்பி வந்தேன்.

கடந்த ஆண்டு 25 டன் காய்கறிகளை அனுப்பினேன். என்னைப் போல பலரும் தைப்பூசத்திற்கு காய்கறிகளைக் குவித்ததால், இந்த ஆண்டு காய்கறிகளைக் குறைவாக கொடுங்கள் என்று சபையில் கூறினார்கள்.

சத்தியஞான சபைக்கு ஏற்றப்படும் காய்கறிகள்

அதனால் இந்த ஆண்டு 18 டன் காய்கறிகள், 100 மூட்டை அரிசி, 7,000 தண்ணீர் பாட்டில்கள், மளிகைப் பொருட்களை அனுப்பினேன். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற வள்ளலாரின் கருத்து சாதாரணமானது கிடையாது.

பசியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். பசிக்கு சாதியோ மதமோ தெரியாது. வள்ளலாரின் சிந்தனைக்கும், இந்த சமூகத்திற்கு அவர் காட்டிய வழிக்கும் முன்னால், நான் செய்வது ஒன்றுமே கிடையாது.

வள்ளலாரின் பக்தர்கள் நாடு முழுவதும், நாடு கடந்தும் அன்றாடம் லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி வருகிறார்கள். அந்த வகையில் வள்ளலார் மூட்டிய நெருப்பு, மதங்களைக் கடந்து இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் எரியும்" என்று நெகிழ்கிறார்.

பத்மஸ்ரீ வென்ற பழங்குடி ஓவியர்; மனைவிக்கு குடியிருப்புடன் அரசு பணி வழங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!

தொல்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரி மலையில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்யங்களைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பிட்ட சில பழங்குடி இன மக்கள் ... மேலும் பார்க்க

நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்ப... மேலும் பார்க்க

பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல். அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர். பத்மாவை நட... மேலும் பார்க்க

`தன் உயிரை தியாகம் செய்து..' - தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 கு... மேலும் பார்க்க

`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்த... மேலும் பார்க்க

"மேதி என் தாய்": நீலகிரி பெட்ட குரும்பர் சமூகத்தின் முதல் இளம் போட்டோகிராபர்!

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், கோட்டர்கள், பணியர்கள், நாடோடிப் பழங்குடிகள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள் என ஐந்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், குறும்பர் இனக்குழுவி... மேலும் பார்க்க