விருதுநகர்: பொன்மஞ்சள் விரிப்பாய் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்! - Sce...
'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026
2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது.
இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு விளக்குகிறார்...
"இதுவரை 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் திருத்தங்களைத் தான் மத்திய பட்ஜெட்டில் பார்த்து வந்தோம்.
கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
அதனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும். அதனால், இந்த ஆண்டு பட்ஜெட் ஸ்பெஷலானது.

இனி 'ஓகே' கொடுத்தால் போதும்!
இந்த ஆண்டு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, இதுவரை நாம் வருமானம் சம்பந்தமான தகவல்களை நிரப்பி வருவோம்.
ஆனால், இனி அரசிடம் இருக்கும் தரவுகளை வைத்து, ஏற்கெனவே அந்தப் படிவம் நிரப்பப்பட்டிருக்கும். அதை செக் செய்து 'ஓகே' கொடுத்தால் மட்டும் போதும். உங்களது வருமான வரிக் கணக்கு ஈசியாக தாக்கல் ஆகிவிடும்.
இது குறித்து, கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வந்தார். ஆனால், இது இந்த ஆண்டு அமலுக்கு வருகிறது.
வீட்டுக் கடனில் சலுகை
இந்த ஆண்டு வருமானம் மற்றும் பென்சன்களில் Standard deduction அறிவிப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது ரியல் எஸ்டேட் கொஞ்சம் தோய்வில் இருக்கிறது. அதை பூஸ்ட் செய்யும் வகையில் இந்தப் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கும். வீட்டுக் கடன் வட்டியில் சலுகைகள் இருக்கலாம்.

இந்தப் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு மிக முக்கியமான அறிவிப்புகள் வெளிவரலாம். மத்திய அரசு இளைஞர்களை தகவல் தொழில்நுட்பத்தைத் தாண்டி, விவசாய தொழில்நுட்பத்திற்கு அழைக்கலாம்.
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக 60 வயது மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... இனியும் அதிகரிக்கும். அதனால், அவர்களுக்கு ஏற்ற முதலீட்டுச் சலுகைகள்... தள்ளுபடிகள் மருத்துவம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுச் சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு வருமான வரி ஸ்லாப்கள் கூட அதிகரிக்கப்படலாம்". என்றார்.














