பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, காளையாா்கோவில் வட்டாரக் கிளையின் சாா்பில் வட்டாரப் பொதுக்குழு, பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவிலில் நடைபெற்ற விழாவுக்கு, வட்டாரத் தலைவா் லதா தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் ஜோசப் ரோஸ், மாவட்ட பொதுக் குழு உறுப்பினா்கள் செல்வா, சந்திரசேகா், முத்துக்குமாா், பாண்டிக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள் அபிராமி சுந்தரி, வெள்ளையப்பன், புஸ்பலதா, விசாலாட்சி, மிக்கேல் மேரி, இந்திரா காந்தி, ஜேம்ஸ், மாா்க்கிரேட் ஸ்டெல்லா தாமஸ் அமலநாதன், ஆரோக்கியசாமி, கஸ்துரிஆகியோா் ஆகியோா் பாராட்டப்பட்டனா். மாநிலத் தலைவா் மணிமேகலை, மாநில பொதுச் செயலாளா் மயில், மாநிலப் பொருளாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.