செய்திகள் :

”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” - மனோஜ் பாண்டியன் அட்டாக்

post image

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த  பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மனோஜ் பாண்டியன்,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில்  பேசிய மனோஜ் பாண்டியன், “கொடநாடு கொலை வழக்கு  என்றைக்கு எடுக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல,  சட்டமன்ற உறுப்பினராகக்கூட வர முடியாது.  

எடப்பாடி பழனிசாமி

எத்தனை ஆதாரங்களை அளித்தாலும் எத்தனை கோணங்களில் நீங்கள் எதை செய்தாலும் சட்டம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும்.  இன்று உங்களுக்கு மத்திய அரசினுடைய பாதுகாப்பு இருக்கலாம்.  தேர்தலுக்குப் பின்னால் கூவத்தூரில் உருவான அ.தி.மு.க பெறக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் எவ்வளவு என்று யூகித்து பார்த்தால் என்னுடைய யூகம் எல்லாம் மூன்றாவது இடம்.

 ஒரு தொகுதி கூட அதிமுக பெறாது என்பதுதான்.   காரணம், அ.தி.மு.க-வை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி விட்டார்கள். தனித்தன்மை என்பதே இல்லை.  கொள்கை என்பதே இல்லை. சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடிய கேட்ப்பார் பிள்ளைகள் என்ற அடிப்படையில்  மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள்.  தலைமைக் கழகத்தில் வைத்து அ.தி.மு.கவுக்கும் பா. ஜ.கவுக்கும் கூட்டணி ஏற்படவில்லை.

மனோஜ் பாண்டியன்

  ஸ்டார் ஹோட்டலில் வைத்துதான் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த அளவுக்குதான் அவர்களுடைய சுயமரியாதை உள்ளது. சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க மாறிவிட்டது.  ஆனால், தி.மு.க கூட்டணி கட்சிகள் அறிவாலயத்திற்கு வருகை தந்து தலைவரை சந்தித்து கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்குதான் கொள்கையும் சுயமரியாதையும் உள்ளது. இதுதான் திராவிட மாடல்.” என்றார்.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க